கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் கிராமப்புற மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் கிராமப்புற மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.


கோவை: கோவை ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள பழங்குடி கிராமங்களான தாணிக்கண்டி, சீங்கப்பதி, நல்லூர்ப்பதி, முள்ளாங்காடு, மத்வராயபுரம், செம்மேடு, ஆலாந்துறை, நரசீபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள், தங்களது மேற்படிப்பைத் தொடர பொருளாதாரம் ஒரு தடையாகிவிடக்கூடாது என்பதற்காக, கடந்த சில ஆண்டுகளாக ஈஷா அறக்கட்டளை பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

கோவை PSG பள்ளி, அவினாசிலிங்கம் கல்லூரி, கற்பகம் கல்லூரி, கொங்குநாடு கல்லூரி, கலைமகள் கல்லூரி, பேரூர் சாந்தலிங்க அடிகளார் கல்லூரி, SNMV கல்லூரி, கரூர் சாரதா நிகேதன் உள்ளிட்ட பல கல்லூரிகளில் கல்வி பயில மாணவர்களுக்கு இது நல்லதொரு வாய்ப்பாக இருக்கிறது.



அதன்படி, கிராமப்புற மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 47 மாணவ, மாணவிகளுக்கு காசோலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈஷா உதவித்தொகை பெற்று கல்வியை முடித்த முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக ஊக்கத்தொகை பெற்றவர்களில், பெரும்பான்மையானவர்கள் மாணவியர் என்பதும் அதில் பெரும்பாலானோர் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



மேலும் அரசு தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துதல், பழங்குடி மற்றும் கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் உள்ளிட்ட கல்வி சார்ந்த பல பணிகளையும் ஈஷா அறக்கட்டளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...