10 சதவீத இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் மறுசீராய்வு மனு தாக்கல் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட்டம் உள்பட தமிழக சட்டப்பேரவையில், நிறைவேற்றப்பட்ட 20 சட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் நிலுவையில் உள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு.


சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், அரசு சட்டக் கல்லூரிகளில் முதுநிலை சட்டப்படிப்பில் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி பேசியதாவது,



ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட சட்ட மசோதா மீது ஆளுநர் இதுவரை எந்த விளக்கமும் கேட்கவில்லை.

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆளுநர் விளக்கம் கேட்கும் பட்சத்தில், உரிய விளக்கம் அளிக்கப்படும். தமிழக சட்டப்பேரவையில், நிறைவேற்றப்பட்ட 20 சட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் நிலுவையில் உள்ளது. சில மசோதாக்களுக்கு விளக்கம் கேட்கப்பட்டு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீது மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா என்பது குறித்து, அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும். 10% இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற மக்கள் கருத்தை திமுக தொடர்ந்து வலியுறுத்தும்.

கேரள மாநிலம் டிஜிட்டல் சர்வே எடுத்து வரும் சூழ்நிலையில், தமிழக எல்லைக்குள் காவல் நிலையம் அமைத்துள்ளதாக எழும் புகார்கள் குறித்த கேள்வி எழுப்பியதற்கு, முதலமைச்சர்தான் முடிவெடுப்பார். சட்ட ரீதியான நடவடிக்கைகள் எதை எடுக்க வேண்டுமோ அதனை நிச்சயமாக எடுப்போம்.

இவ்வாறு அமைச்சர் ரகுபதி பேசினார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...