கோவை தெற்கு மண்டலம் ஈச்சனாரி பகுதிகளில்‌ புதிதாக கட்டப்பட்ட 7 அங்கன்வாடி மையங்கள் திறப்பு

கோவை தெற்கு மண்டலம் வார்டு எண்‌.97க்குட்பட்ட ஈச்சனாரியில்‌ ரூ.1.05 கோடி மதிப்பீட்டில்‌, புதிதாக கட்டப்பட்ட 7 அங்கன்வாடி மையங்களை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.97க்குட்பட்ட ஈச்சனாரியில்‌ 97 மற்றும்‌ 100வது வார்டு பகுதிகளில்‌ 6 திட்டத்தின்‌ கீழ்‌ தலா ரூ.15 இலட்சம்‌ வீதம்‌, மொத்தம்‌ ரூ.1.05 கோடி மதிப்பீட்டில்‌, புதிதாக கட்டப்பட்ட 7 அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டன.



புதிதாக கட்டப்பட்ட 7 அங்கன்வாடி மையங்களையும் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து அங்கன்வாடி அமைப்பாளர்களிடம்‌ சாவியை வழங்கினார்கள்‌.

பின்னர் PMJVK திட்டத்தின் கீழ்‌ தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு 15 எண்ணிக்கையில்‌ அங்கன்வாடி மையம் மற்றும்‌ 1 எண்ணிக்கையில்‌ பள்ளி கழிப்பிடம்‌ கட்டுவதற்கு ரூ.245 இலட்சம்‌ ஓதுக்கீடு செய்யப்பட்டது.



PMJVK திட்டத்தின் முதற்கட்டமாக வார்டு எண்‌.97க்குட்பட்ட ஈச்சனாரி மற்றும்‌ கோண்டிஸ்‌ காலனி ஆகிய இடங்களிலும்‌, வார்டு எண்‌.100க்குட்பட்ட மேட்டூர்‌, அம்மன்புதூர்‌, அன்னாபுரம்‌, கணேசபுரம்‌ மற்றும்‌ ஈஸ்வரன்‌ செட்டியார்‌ வீதி உள்ளிட்ட 5 இடங்களிலும்‌, தலா ரூ.15 இலட்சம்‌ வீதம்‌, மொத்தம்‌ 7 இடங்களில்‌ ரூ.1.05 கோடி மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களையும் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள்‌.



இந்நிகழ்ச்சியில்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா, தெற்கு மண்டல தலைவர்‌ ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சி கார்த்திகேயன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ அப்துல்‌ காதர் ,உதயகுமார்‌, அஸ்லாம்பாஷா, உதவி ஆணையர்‌ அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்‌ கருப்பசாமி, உதவி பொறியாளர்‌ சபரிராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ பலர் கலந்து கொண்டனர்‌.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...