கோவையில் மழைநீர் தேக்கம், அவிநாசி மேம்பாலத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு..!

தொடர் மழை காரணமாக அவிநாசி மேம்பால கீழ்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வரும் நிலையில், அப்பணிகளை ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு செய்தனர்.


கோவை: இன்று காலை முதல், கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதையடுத்து, மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதிகளை பொறுத்தவரை பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகளை, போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.



குறிப்பாக, அவிநாசி மேம்பால கீழ் பகுதியில் அதிகமான மழை நீர் தேங்குவது வழக்கமாக ஒன்றாக உள்ளதால், மாநகராட்சி ஊழியர்கள் பம்ப் மூலம் மழைநீரை அகற்றி வருகின்றனர்.



நீர் வெளியேற்றப்படும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.



மேலும், அப்பகுதியில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதா? என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின் போது, கோவை மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சௌமியா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...