கோவையில் கனமழை - மழைநீர் வடிகால், கால்வாய் தூய்மை பணியால் தரைப்பாலங்களில் நீர் தேங்குவது தவிர்ப்பு

கோவையில் இரவு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்களில் மாநகராட்சியின் தூய்மை பணி காரணமாக லங்கா கார்னர் உள்ளிட்ட முக்கிய தரைப்பாலங்களில் நீர் தேங்காமல் வெளியேறியது. He ruled.


கோவை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று இரவு முழுவதும் தொடர் கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் கோவை மாநகரில் முக்கிய பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனிடையே வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி கோவை மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால், கால்வாய்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் நீர் தேங்காமல் வெளியேறியது.

குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து மழை பெய்யும் போது கோவை லங்கா கார்னர், அவிநாசி மேம்பாலம் மற்றும் கிக்கானிக் தரைப்பாலம் முழுமையாக நீர் தேங்கி அந்த சாலைகளில் போக்குவரத்து முடங்கும் சூழல் ஏற்படும். பின்னர் ராட்சத மோட்டர்கள் மூலம் நீண்ட நேரம் நீர் வெளியேற்றப்பட்டு சாலைகள் மீண்டும் திறந்து விடப்படும்.



ஆனால் அந்த கால்வாய்கள், மழை நீர் வடிகால் தூய்மை செய்யப்பட்ட நிலையில் இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்த நிலையிலும் இந்த தரைப்பாலங்களில் நீர் தேங்காமல் வெளியேறியது.



இதனால் எந்த பாதிப்பும் இன்றி அந்த சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...