கோவையில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை - கடந்த ஒருவாரத்தில் ரூ.13.50 லட்சம் அபராதமாக வசூல்

சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் தமிழக அரசு அபராத தொகை உயர்வு அமலுக்கு வந்த நிலையில் கோவை மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் 1,349 பேரிடம் ரூ.13. 50 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தகவல்.


கோவை: தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்பை தடுப்பதற்காக போக்குவரத்து விதி மீறலுக்கு அபராத தொகையை உயர்த்தி சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் மோட்டார் வாகன சட்டங்களை கடுமையாக்கும் வகையில் பல மடங்கு அபராத தொகை உயர்த்தப்பட்டது.

அதன்படி, இருசக்கர வாகனம், கார், வேன், லாரி, ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் மூலம் உண்டாகும் விபத்தை குறைப்பதற்காக கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் புதிய அபராத தொகைஅமலுக்கு வந்தது.

இந்நிலையில் கோவை மாநகரம் முழுவதும் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில்ட்ராஃபிக் போலிசார் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய சாலைகளில் சிக்னல்களில் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிய வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

30 வகையான விதிமீறல்கள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அதிக வேகம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், விபத்து ஏற்படுத்தும்படி வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், ஒரு வழிப்பாதையில் வாகனம் ஓட்டுதல், மோட்டார் சைக்கிளில் 3 பேர் அமர்ந்து செல்லுதல், டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக 1,000 ரூபாய்அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஹெல்மெட் அணியாமல், இருசக்கர வாகனம் ஓட்டினால் 1,000 ரூபாய், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் 1,000 ரூபாய், சிக்னலை மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,349 பேருக்கு ரூ.13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.

புதிய அபராத நடைமுறைகளின் படி, அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக பாரம் ஏற்றி வரும் சரக்கு வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், கூடுதலாக இருக்கும், ஒவ்வொரு டன்னுக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது, கோவை மாநகரில் மோட்டார் வாகன விபத்தை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை ஓட்டினால் விபத்து குறையும். உயிரிழப்பு தவிர்க்கப்படும்.

விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை தொடரும். அபராதத் தொகை குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாகவோ, அல்லது நீதிமன்றம் மூலமாகவோ செலுத்தி குற்ற தண்டனை நடவடிக்கையில் இருந்து விடுவித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...