பொள்ளாச்சியில் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது

பொள்ளாச்சியில் நடைபெறவுள்ள தனியார்துறையின் வேலை வாய்ப்பு முகாமில் மாணவர்கள், பழங்குடியினர் திருநங்கைகள், நலிவடைந்த பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், என அனைவருக்கும் கலந்துகொள்ளும் வையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் அறிவித்துள்ளார்


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகின்ற 27ம் தேதி பொள்ளாச்சியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

அந்நிகழ்வை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோனைக்கூட்டம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் தலைமையில் இன்று நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில்:-

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்புத்துறை சார்பில் இரண்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 230 நபர்களும். ஆர்விஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முகாமில் 18 நபர்களும் வேலைவாய்ப்பு பெற்றனர்.

மேலும், தற்போது பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலையாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகின்ற 27ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் தொழில் வணிக நிறுவனங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் உள்ளீட்ட 200க்கு மேற்பட்ட வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது குறித்து அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும்வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பார பதாகைகள் வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும், துண்டு பிரசுங்கள் விநியோகம் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் விளம்பரப்படுத்துதல், மற்றும் பேருந்துகளின் வாயிலாகவும் இம்முகாம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கல்லூரிகளில் NCC, NSS மாணவர்களை ஈடுபடுத்தி உதவி மையம் அமைக்கவேண்டும். இம்முகாமில் வேலையை நாடுபவர்கள் கலந்துகொள்ள ஏதுவாக முகாம் நடைபெறும் ஊராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் வால்பாறைஉள்ளிட்ட இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கவேண்டும். இம்முகாம் நடைபெறும் நாளில் தீயணைப்பு வாகனம் 108 ஆம்புலன்ஸ் தேவையான மருத்துவக் குழு ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் நல விடுதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் நல விடுதிகளில் தங்கி பயிலும் கல்லூரி மாணவர்கள் பழங்குடியினர் திருநங்கைகள் நலிவடைந்த பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், மற்றும் இதர பயனாளிகளை இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பிற மாவட்டங்களில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமைவிட சிறப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இம்முகாமை நடத்திட தேவையான நடவடிக்கைகளை அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவர் லீலா அலெக்ஸ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...