திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கட்டடங்கள் - காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் புதிதாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், புதிய கட்டடங்களை சென்னையில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம்,பூ மார்க்கெட், தென்னம்பாளையம் வாரச்சந்தை மற்றும் வாகனம் நிறுத்துமிடம் ஆகியவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இடிக்கப்பட்டு புதிதாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.



இந்நிலையில் பணிகள் நிறைவடைந்ததையடுத்து 75.43 ரூபாய் கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலைஞர் மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதனை ஒட்டிய பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், பூ சந்தை மற்றும் தென்னம்பாளையம் சந்தை ஆகிய கட்டடங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.



சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக புதிய கட்டடங்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.



திருப்பூரில் நடைபெற்ற கட்டடங்கள் திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வினீத், மேயர் தினேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...