கோவை சிங்காநல்லூரில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பெண்ணிடம் 5 சவரன் நகை பறிப்பு - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு..!

சிங்காநல்லூர் அடுத்த திருக்குமரன் நகரில் வீடுபுகுந்து தனியாக இருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலி சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை, சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூரை சேர்ந்தவர் செல்வி (50). இவர், திருகுமரன் நகர் பகுதியில் தனது 2 மகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

திருச்சி சாலையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக தயாராகியுள்ளார்.

இந்நிலையில் காலை 10 மணியளவில் வேலைக்கு செல்ல வீட்டின் கதவை திறந்தபோது வெளியே ஒரு அடையாளம் தெரியாத நபர் நின்று கொண்டு இருந்துள்ளார்.

அவரை கண்ட செல்வி எதற்காக இங்கே நிற்கிறீர்கள் என கேட்ட போது, அந்த மர்ம நபர், வீட்டின் உரிமையாளர் வீட்டை பார்க்கச் சொன்னதாக கூறியுள்ளார்.

இதில், சந்தேகமடைந்த செல்வி கதவை மூட முயன்ற போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு, செல்வியை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து செல்வி பதறிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த போதுதங்க சங்கிலியை பறித்துச் சென்ற நபர், வெளியே காத்திருந்த மற்றொரு நபரின் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றது தெரியவந்தது

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட செல்வி சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்த நிலையில் ஒருவர் வெளியே காத்திருந்து நோட்டமிடுவதும் மற்றொரு நபர் வீட்டிற்குள் புகுந்து செல்வியிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து விட்டு தயார் நிலையில் இருந்த இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

வீட்டில் செல்வி தனியாக இருப்பதை பயன்படுத்தி இருவரும் இந்த சங்கிலி பறிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் இச்சமபவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் பட்டபகலில் வீடு புகுந்து தனியாக இருந்தபெண்ணிடம் மர்மநபர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...