திருப்பூரில் 9 வயது மாணவிக்கு டெங்கு பாதிப்பு - மாநகராட்சி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு காய்ச்சல் முகாம்

திருப்பூர் நெசவாளர் காலனி மாநகராட்சி பள்ளியில் பயின்று வரும் 4ஆம் வகுப்பு மாணவி டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாநகராட்சி சார்பில் பள்ளியில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த பருவமழை காரணமாக தட்ப வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரில் வசித்து வருபவர் பாண்டியன். இவர் நெசவாளர் காலனி பகுதியில் செகண்ட்ஸ் குடோனில் வேலை செய்து வருகிறார்.

இவரது மகள் அழகு மீனாட்சி, திருப்பூர் பி.என்.சாலை நெசவாளர் காலனி மாநகராட்சிப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் நான்கு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் சரியாகவில்லை.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அழகு மீனாட்சிக்கு புதன்கிழமை ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

ஆனால் அவரது பெற்றோர், தங்கள் சொந்த ஊரான மதுரை மாவட்டத்திற்கு மாணவியை அழைத்துச் சென்று திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து தற்போது சிகிச்சை அளித்து வருவதாக மாணவி அழகு மீனாட்சியின் தந்தை பாண்டியன் தெரிவித்துள்ளார்.



இதனை தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், பள்ளியில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது.



மாநகர் நல அலுவலர் கெளரி சரவணன் தலைமையிலான சுகாதாரத்துறை ஊழியர்கள் பள்ளி வளாகத்தில் கொசு மருந்து அடித்தும், அங்கு பயிலும் மாணவர்களுக்கு நில வேம்பு கசாயம், காய்ச்சல் தடுப்பு மாத்திரைகள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...