காசி தமிழ் சங்கமத்திற்கான 5வது சிறப்பு ரயில் இன்று அதிகாலை கோவையில் இருந்து புறப்பட்டுச் சென்றது

காசி தமிழ்ச்சங்கமத்திற்கு தமிழகத்தில் இருந்து செல்லும் 5வது சிறப்பு ரயில் சேவை கோவையில் இருந்து இன்று அதிகாலை 5 மணிக்கு புறப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து 90க்கும் மேற்பட்டோர் பயணத்தை தொடங்கினர்.



கோவை: காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



இந்நிலையில் இந்த காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்காக தமிழகத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 4 ரயில்கள் தமிழகத்தில் இருந்து காசிக்கு சென்றுள்ள நிலையில், 5வது ரயில் சேவை கோவையில் இருந்து இன்று அதிகாலை 5 மணியளவில் துவங்கியது.



தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 90 பயணிகள் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் ரயிலில் தங்களது பயணத்தை இன்று துவங்கினர்.

கடந்த 20ம் தேதி கோவையிலிருந்து சென்ற ரயிலில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.



இன்று கோவையிலிருந்து கிளம்பியுள்ள ரயிலில் வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் பலர் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவை ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளை பாரதிய ஜனதா கட்சியினர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.



இந்த நிகழ்வில் பாஜக வழக்கறிஞர் பிரிவின் மாநிலத் தலைவர் வணங்காமுடி, ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் அரசூர் அசோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காசி தமிழ் சங்கமம் ரயில் சேவை கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து துவங்குவதையொட்டி, ரயில்வே மற்றும் மாநகர காவல்துறையினர்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



Newsletter

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...