கோவை அடுக்குமாடி குடியிருப்பில் வெடிகுண்டு வைத்த வழக்கு-தேடப்படும் குற்றவாளியாக முஜிபூர் ரஹ்மான் அறிவிப்பு

கோவை கிளாசிக் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பில் வெடிகுண்டு வைத்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் முஜிபூர் ரகுமான் என்பவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த கோவை குற்றவியல் நீதிமன்றம் டிசம்பர் 23-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.


கோவை: கோவை அரசு மருத்துவமனை எதிரில் உள்ள கிளாசிக்கார்டன் குடியிருப்பின் கார் பார்கிங் பகுதியில் கடந்த 1997-ம்ம ஆண்டு மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டை வைத்து விட்டு தப்பிச்சென்றனர்.

ஆனால் குடியிருப்பின் காவலாளி அந்த வெடி குண்டு பேக்கை பார்த்துவிட்டு உடனடியாக அதை வெளியே உள்ள குப்பை தொட்டியில் வைத்து விட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் 10 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். பின்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணையின் முடிவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டு தற்போது இவ்வழக்கானது நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கில் 11 ஆவது குற்றவாளியான ஷாஜகான் மற்றும் 12 ஆவது குற்றவாளியான முஜிபூர் ரகுமான் ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு மேற்படி ஷாஜகானை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு தற்போது பிணையில் இருந்து வருகிறார்.

ஆனால் 12-வது குற்றவாளியான போத்தனூரை சேர்ந்த முஜிபூர் ரகுமான் என்பவர் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 23-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அவரது வீடு மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசாரால் நோட்டீஸ் ஒட்டப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...