திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தியில் அறிவிப்பு பதாகை - எதிர்ப்பு காரணமாக அகற்றம்

திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தியில் மட்டும் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டதால் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ரயில்வே அதிகாரிகள் உடனடியாக பதாகையை அகற்றினர்.



திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில்ஆங்கிலத்தில் தகவல் மையம், தமிழில் சேவை மையம் மற்றும் ஹிந்தியிலும் எழுதப்பட்டிருந்தது.



இந்நிலையில் புதிதாக அச்சிடப்பட்ட பேப்பர் அறிவிப்பு பதாகை சேவை மையத்தின் முன்பு ஒட்டப்பட்டது. இதில் ஹிந்தி எழுத்துக்களில் சகயோக் என எழுதப்பட்டிருந்தது. தமிழகத்திற்கு அதிகளவில் வடமாநில தொழிலாளர்கள் வருவதால் அவர்களுக்கு புரியும் வகையில் எழுதப்பட்டிருப்பதாக பலரும் எண்ணிய நிலையில் அதன் மேலே ஆங்கிலத்திலும் சகயோக் எனவும் தமிழ் எழுத்திலும் சகயோக் எனஅச்சிடப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் பலருக்கு அதன் அர்த்தம் புரியாத நிலை ஏற்பட்டது.

ஹிந்தியில் சகயோக் என எழுதப்பட்டால் ஆங்கிலத்தில் இன்பர்மேஷன் சென்டர் எனவும் தமிழில் சேவை மையம் என எழுதப்பட்டால் தானே அனைத்து மொழியினருக்கும் புரியும் என்றும் அதை விடுத்து அனைத்து மொழியினரும் சகயோக் என படித்தால் அதன் அர்த்தத்தை எப்படி புரிந்து கொள்வது புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்துசேவை மையத்தின் முன்பு ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு பெயர் பதாகையை அதிகாரிகள் உடனடியாக அகற்றினர்.





Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...