கோவையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பட்டம்

கோவையில் இனாமாக கொடுக்கப்பட்ட நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்துவதாக கூறி, அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் சொத்துக்கள் விவசாயிகளுக்கு இனாமாக கொடுக்கப்பட்ட நிலையில் அதற்கான உரிமை பட்டா வழங்கப்பட்டது. இதனிடையே இந்து சமய அறநிலையத்துறை இனாமாக கொடுக்கப்பட்ட நிலங்களை கையகப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.



இதனை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் இனாம் விவசாயிகள் இயக்கத்தினர் கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழக அரசு கடந்த 1963-ஆம் ஆண்டு இனாம் ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து நிலத்தை உழுது கொண்டிருந்த உழவர்களுக்கு உரிமை பட்டா வழங்கியுள்ளதாகவும் ஆனால் அதிகாரிகள் இந்த நிலத்தை கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.



நில உரிமை படைத்த உழவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி சட்டவிரோதமாக அறிவிப்புகளை அனுப்பி, உழவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்க அறநிலையத்துறை முயற்சி செய்து வருவதாகவும் இதனை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...