உக்கடம் 84வது வார்டு பகுதியில் பைபாஸ் சாலையில் இருந்து செல்வபுரம் செல்லும் சாலையில் 30க்கும் மேற்பட்ட சாலை மின் விளக்குகள் உள்ளன. அதில் இரவு நேரங்களில் பாதி மின் விளக்குகளே எரிகின்றது. மீதமுள்ள மின் விளக்குகள் எரியாத நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் இரவு நேரங்களில் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர்.

குறிப்பாக, உக்கடம் மீன் மார்க்கெட் அருகில் உள்ள சாலையோர வீட்டு பகுதிகளிலும் இரவு நேரங்களில் மின் விளக்கு எரியாததால் அப்பகுதிகளில் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களாலும் பெரும் விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை மாநகராட்சி எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.