உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி உதகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் - அமைச்சர் கா.ராமச்சந்திரன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்

உதகையில் உள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்க நிகழ்வில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அம்ரித் கலந்து கொண்டு, எய்ட்ஸ் தின உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்க நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் கலந்து கொண்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டார்.



பின்னர் இந்த நிகழ்வில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித் உள்ளிட்டோர் உலக எய்ட்ஸ் தினத்திற்கான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் பேசியதாவது, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எச்.ஐ.வி நோய் என்பது அத்தொற்றுள்ளவர்களுடன் சேர்ந்து விளையாடினாலோ, உபயோகித்த பொருட்களை உபயோகப்படுத்தினாலோ பரவாது. அனைவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நமது ஆதரவை கொடுத்து அவர்களும் அவர்கள் குழந்தைகளும் வாழ ஒரு வாய்ப்பளிக்க வேண்டும்.

நமது மாவட்டத்தில் எச்.ஐ.வி எய்ட்ஸ்கான ஆலோசனை மற்றும் பரிசோதனையானது அனைத்து அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் செயல்பட்டு வரும் நம்பிக்கை மையம், நடமாடும் நம்பிக்கை மைய ஊர்தியின் மூலம் இலவசமாக பரிசோதிக்கப்பட்டு அவர்களின் நிலை ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு எச்.ஐ.வி எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வர கட்டணமில்லா பேருந்து பயண அட்டை, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஓய்வூதியமும், முதியோர் உதவித்தொகை, காப்பீட்டு திட்டம், குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு முன்னுரிமை அளித்து குடும்ப அட்டை, கல்வி உதவித்தொகை போன்ற வசதிகளையும் செய்து வருகிறது.

அதனைத்தொடர்ந்து தற்காலிக இயலாமைக்கான உதவித்தொகை 16 பயனாளிகளுக்கு மாதந்தோறும் பெறுவதற்கான ஆணையையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கி சமபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.



முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அம்ரித் உதகை ரயில் நிலையத்தில் எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடை பயணத்தை தொடங்கி வைத்து, எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த ஒட்டுவில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டினார்.

இந்த பேரணியில் எமரால்டு ஹைட்ஸ் பெண்கள் கல்லூரி, செவிலியர் பயிற்சி பள்ளி, ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி மற்றும் கேத்தி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர்.

இப்பேரணியானது உதகை ரயில் நிலையத்தில் தொடங்கி, உதகை சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில், உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, இணை இயக்குநர் (மருத்துவம்) பழனிசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனப்ரியா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பாலுசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், உதகை வட்டாட்சியர் ராஜசேகர், மாவட்ட திட்ட அலுவலர் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அறிவழகன், உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...