11.02.2017 வரும் சனிக்கிழமை அன்று தகுதி வாய்ந்த முதுகலை/ இளங்கலை/ இடைநிலை பழங்குடியினர் இன ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பழங்குடியினர் பள்ளிகளில் நியமனம் செய்ய ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. இதில் திருப்பூர், கோயமுத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இனத்தை சேர்ந்த தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறார்கள்.
மேலும், தேர்வினில் கலந்து கொள்ள வரும் விண்ணப்பதாரர்கள் கோவை அவினாசி சாலையில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரியில் காலை 8:00 மணிக்கு வர வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் (D.T.Ed/B.Ed/M.Ed) சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடுப்ப அட்டை, ஆசிரியர் தகுதி தேர்வு பெற்றிருப்பின் அதன் சான்றிதழ், இதர பள்ளிகளில் பணியாற்றிருப்பின் முன் அனுபவச் சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பக பதிவு அட்டை போன்றவையின் அசல் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு நகல்களுடன் வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.