நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: கோவையில் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீவிர சோதனை..!

நாளைய தினம் பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர சோதனை.



கோவை: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது. நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ஆம் தேதி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆண்டு தோறும் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது வழக்கம்.

இந்நிலையில் நாளைய தினம் பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை ஆட்சியர் அலுவலகம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் என முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.



மேலும், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படுவதை ஒட்டி ஏற்கனவே உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இணைந்து கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மனு அளிக்க வரும் அனைத்து பொதுமக்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் எடுத்து வரும் உடைமைகளும் வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகளைக் கொண்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

அதேபோல், ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...