கோவை மத்திய மண்டலத்தில் நடைபெற்று வரும் தூய்மை பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

கோவை மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ தூய்மைப்‌ பணிகள்‌, குடிநீர் விநியோகப்‌ பணிகள்‌, மற்றும்‌ சீர்மிகு நகரத்திட்ட பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில்‌ ஆய்வு.



கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.69க்குட்பட்ட மேட்டுப்பாளையம்‌ சாலை, அவிநாசிலிங்கம்‌ கல்லூரி அருகில்‌ பாரதிபார்க்‌ இரண்டாவது வீதி பகுதிகளில்‌ மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை, மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளா்‌ பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்காத குப்பைகள்‌ என தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்‌ பணியாளாகளுக்கு அறிவுரை வழங்கினார்‌.



இதனையடுத்து அப்பகுதியில்‌ உள்ள குடிநீர் நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு பொதுமக்களுக்கு விநியோகம்‌ செய்யப்படும்‌ குடிநீரின்‌ தரம்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில் ஆய்வு செய்தார்.



தொடர்ந்து பாரதிபார்க்‌ பகுதியில்‌ உணவு கழிவுகள்‌ மற்றும்‌ காய்கறி கழிவுகளிலிருந்து பயோகேஸ்‌ மூலம்‌ மின்சாரம்‌ உற்பத்தி செய்யும்‌ மையத்தின்‌ செயல்பாடுகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்டார்.



அதனைத்‌ தொடர்ந்து, மத்திய மண்டலம்‌, ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட்டு வரும்‌ மாதிரி சாலையின்‌ ஒரு பகுதியாக மிதிவண்டி பாதை, தாமஸ்பார்க்‌ சந்திப்பில்‌ மீடியா டவர்‌ (Media Tower) அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

இதனை மாவட்ட ஆட்சி தலைவர்‌ சமீரன்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து பணிகளை தரமாகவும்‌, துரிதமாகவும்‌ செய்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.



தொடர்ந்து வாலாங்குளத்தில்‌ ரூ.67.86 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்று வரும்‌ சீர்மிகு நகரத்‌ திட்ட பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் வாலாங்குளத்தின்‌ கரையோர பகுதிகளில்‌ பயனுள்ள மரக்கன்றுகளை நட்டு பராமரித்திடவும்‌, மேலும்‌, வடகரை பகுதியில்‌ கட்டப்பட்டு வரும்‌ உணவுக்கூடம்‌, திறந்தவெளி கூட்டரங்கம்‌ ஆகிய கட்டுமான பணிகளை தரமாகவும்‌, துரிதமாகவும்‌ செய்து முடிக்க சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ உத்தரவிட்டார்‌.

இந்த ஆய்வுகளின் போது, மாமன்ற உறுப்பினர்‌ சரவணக்குமார்‌, ஸ்மார்ட்‌ சிட்டி பொது மேலாளர்‌ பாஸ்கர், உதவி ஆணையர்‌ மகேஷ் கனகராஜ்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌ புவனேஸ்வரி, சுகந்தி, உதவி நகரமைப்பு அலுவலர்‌ பாபு, உதவி பொறியாளர்‌ கமலக்கண்ணன்‌, சுகாதார அலுவலர்‌ ராமச்சந்திரன்‌, சுகாதார ஆய்வாளர்‌ சரவணகுமார்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...