இந்திய இறுதி நிலை மருத்துவ சிகிச்சை கூட்டமைப்பின் 24வது சர்வதேச கருத்தரங்கம்- 2017

ஜி.கே.என்.எம் மருத்துவமனை ரக்ஷா ஹாஸ்பைஸ் அமைப்புடன் இணைந்து 2001-ம் ஆண்டு முதல் உயர்தரமான இறுதி நிலை மருத்துவ சிகிச்சைகளை கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த நோயாளிகளுக்கு மிகச் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகிறது. ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனன மற்றும் கோவை புற்றுநோய் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து 24வது சர்வதேச இறுதிநிலை மருத்துவ சிகிச்சை கருத்தரங்கத்தினை கோவை கொடிசியா அரங்கில் பிப்ரவரி 1௦-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடத்துகின்றன. 

பொதுமக்கள் மற்றும் மருத்துவத் துறையின் மத்தியில் இறுதி நிலை மருத்துவ சிகிச்சை மற்றும் அதன் தேவைகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்துவதே இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும். புற்றுநோய், இதயம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள பல்வேறு நுட்பமான தகவல்களை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் இந்த கருத்தரங்கின் வாயிலாக பெற முடியும்.

இந்த மாபெரும் கருத்தரங்கில் 1000-த்திற்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச மருத்துவ நிபுணர்கள் தங்களது அனுபவம் மற்றும் தாங்கள் இத்துறையில் சேகரித்துள்ள அரிய பல தகவல்களை இந்த கருத்தரங்கம் நடைபெறும் மூன்று நாட்களும் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள உள்ளார்கள்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...