கோவையில் அதிமுக முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் செய்தியாளர்களுக்கு பேட்டி. பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் விருப்பம். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் இரண்டு மாதங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட பல பிரச்சினைகளை திறம்பட பன்னீர்செல்வம் கையாண்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தேவையான திட்டங்களை பெற்று தந்துள்ளார் பன்னீர்செல்வம் எனவும் பொதுமக்களும் பன்னீர்செல்வத்தை மனப்பூர்வமாக விரும்புகின்றனர் எனவும் தமோதரன் பேட்டி அளித்தார்.
மேலும், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கொடுப்பது என்பது அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் மனநிலையை பொறுத்து எனவும் அதிமுக கட்சி உடையக்கூடாது என்பதே தன்னை போன்ற கட்சியினரின் விருப்பம் எனவும் கூறிய அவர். இன்று பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவிக்க இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் தமோதரன் இவ்வாறு கூறினார்.