ஜி.ஆர்.டி கல்லூரியில் மாணவர்களுக்கான சிந்தனை குறித்த விளம்பர பிரச்சாரம் நிகழ்வு

ஜி.ஆர்.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் சமூக விழிப்புணர்வு சார்ந்த சிந்தனை விளம்பர பிரச்சாரம் நிகழ்வுகள் நடைபெற்றது. இதனை கல்லூரி முதல்வர் சாந்தா தொடங்கி வைத்தார். காட்சி தொடர்பியல் துறை தலைவர் ராதா தலைமை தங்கினார். 

 



இதில், சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பல்வேறு நிலைகளை மாணவர்கள் சமூக விழிப்புணர்வு மூலமாக இந்நிகழ்வில் நடத்தினர். அதில் நஷ்டா என்னும் காலை உணவுகள் குறித்தும், லைட்ஸ் அவுட் என்னும் வாகனத்தில் இரவு நேரங்களில் செல்லும் போது எதிரே வரும் வாகனங்களில் தொலைதூர ஒளி ஆபத்து குறித்தும், ஓரம் போ என்னும் சாலை பாதுகாப்பு குறித்தும், வாகனம் ஓட்டும் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் தவிர்த்தல், ஃபிட் ஓ ஃபிட் உடற்பயிற்சி, அழகு சாதனம் பொருட்கள் மூலம் ஏற்படும் தீங்குகள், உணவில் இருக்கும் கலப்படம், பணமதிப்பு இழப்பை குறைத்தல், சுற்றுசூழல் மாசு கட்டுப்படுத்துதல் போன்றவற்றை விளக்கும் வகையில் பல்வேறு சிந்தனை விளம்பர பிரச்சாரம் நிகழ்வுகள் மாணவர்கள் தயாரித்தும் அதனை மற்ற மாணவர்களுக்கு விளக்கி கூறினார். மேலே குறிப்பிடப்பட்ட தலைப்புகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க விளையாட்டுக்கள் மற்றும் கடைகள் போன்றவற்றை ஜி.ஆர்.டி கல்லூரி மாணவர்கள் நிகழ்வின் ஒரு பகுதியில் இதனை நடத்தினர்.



இது குறித்து பேராசிரியர் மோகனசுதன் சிம்பிளிசிட்டி நிருபரிடம் பேசுகையில்; முதலாம் ஆண்டு காட்சி தொடர்பியல் துறை மாணவர்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் கற்பிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து மாணவர்களுக்கு திட்ட வேலைகள் அளிக்கப்படுகிறது. மேலும் இதனை சமூக பணிக்காக நடத்துவதற்க்காக திட்டமிடப்பட்டது. இந்த சமூக விழிப்புணர்வு சார்ந்த சிந்தனை விளம்பர பிரச்சாரம் நிகழ்வுகள் காட்சி தொடர்பியல் துறை மாணவர்களுக்கு அறிவுத்திறன் பெருகுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் இது சமூக மாற்றத்தினை கொண்டுவருவதற்கும் உதவும் என்றார். 





Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...