இன்று (08.02.2017) சேலம் விருத்தாசலம் வழித்தடத்தில் பயணிகள் ரயில்களில் (ரயில் எண்.76847-சேலம் விருத்தாசலம் பயணிகள் ரயில், ரயில் எண்.76850 விருத்தாசலம் சேலம் பயணிகள் ரயில், ரயில் எண் 56513- காரைக்கால் பெங்களூரு பயணிகள் ரயில் மற்றும் ரயில் எண் 76849- விருத்தாசலம் சேலம் பயணிகள் ரயில்) சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பயணச்சீட்டு பரிசோதனையில் 62 பேர் தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது கண்டு பிடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து 19,770 ரூபாய் பயணச்சீட்டுத் தொகை மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
அது போல, 19 பேர் தகுந்த புக்கிங் இல்லாமல் சுமைகளை ஏற்றிச் சென்றது கண்டு பிடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து 3,170 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இந்த சோதனையை சேலம் கோட்ட துணை வணிகவியல் மேலாளர் எம். ஷாஜஹான் தலைமையிலான 13 பயணச்சீட்டு பரிசோதகர்கள், 3 ரயில்வே பாதுகாப்புப் படை வீர்ர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்டனர். இது போன்ற திடீர் பயணச்சீட்டு பரிசோதனைகள் மேலும் பல இடங்களில் செய்யப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரி சங்கர் வர்மா தெரிவித்தார்.