அதிமுக கட்சியின் நிலைபாடு குறித்து கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி சிம்ப்ளிசிட்டி'க்கு அளித்த சிறப்பு பேட்டியில், மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட செயலாளர் அப்பாஸ் கூறுகையில்:
அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கிறது, அதற்கு மற்ற கட்சிகள் தலையிட முடியாத சூழல் உள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சி பொறுத்தவரை மாநில தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதற்கேற்பதான் முடிவு செய்ய முடியும். அதிமுக கட்சியின் பொது செயலாளர் சசிகலாவிற்கு தற்போது மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தாலும், தமிழகத்திற்கு முதலைவராக சசிகலா தேர்தெடுக்கப்பட்டால் அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதன் மூலம் மக்களின் எதிர்ப்பில் இருந்து விடுபடலாம். உதாரணமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தபடி தமிழகத்தில் படிப்படியாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதை சசிகலா பதவியேற்றால் முழுமையாக தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற நல்ல முயற்சியை செய்வதன் மூலம் தமிழக மக்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது.
தற்போது கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இதன் மூலம் அதிமுக பொது செயலாளர் சசிகலா தமிழகத்திற்கு முதலமைச்சராக பதவியேற்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு சசிகலா தமிழக முதல்வராக பதவி வகித்தால் மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்கும் இவ்வாறு அவர் கூறினார்.