திருப்பூரில் 10 க்கும் மேற்பட்டோரை கடித்த தெரு நாய்கள் - துரத்தி பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்: நிம்மதி அடைந்த மக்கள்..!

திருப்பூர் மாநகராட்சியில் 44 மற்றும் 45 வார்டுக்குட்பட்ட பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட பொதுமக்களை கடித்த தெரு நாய்களை மாநகராட்சி அலுவலர்கள் 3 மணி நேரமாக துரத்தி பிடித்து சென்றதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றித் திரிவதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 44 மற்றும் 45 வது வார்டு பகுதிகளில் இரவு நேரத்தில் சாலையில் சென்ற 10 க்கும் மேற்பட்ட பொதுமக்களை தெரு நாய்கள் கடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்தவர்கள் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரவில் 10 க்கும் மேற்பட்டவர்களை தெரு நாய்கள் கடித்து குதறிய செய்தியை கேட்ட அப்பகுதி மக்கள், அச்சத்தில் இன்று காலை முதல் வீட்டை விட்டு வெளியில் வரவே தயங்கும் சூழல் நிலவி வருகிறது.



இந்நிலையில் இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அளித்த புகாரின் பேரில், 44 மற்றும் 45 வது வார்டில் பொதுமக்களை கடித்த நாய்களை இன்று காலையில் மாநகராட்சி ஊழியர்கள் 3 மணி நேரமாக போராடி பிடித்துச் சென்றனர்.



இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும், இதேபோல், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு குடியிருப்பு மற்றும் பிரதான சாலைகளில் இரவு நேரங்களில் தெரு நாய்கள் தொல்லை பன்மடங்கு அதிகரித்து வருவதால், தெரு நாய்களை பிடித்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...