சிக்கிமில் விபத்தில் உயிரிழந்த பாலக்காட்டை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் கோவை விமான நிலையம் வந்தடைந்தது

சிக்கிமில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த பாலக்காடு பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் வைசாக்கின் உடல் விமானம் மூலம் கோவை வந்த நிலையில், ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


கோவை: சிக்கிம் மாநிலத்தில் உள்ள சாட்டன் என்ற இடத்திலிருந்து கடந்த டிசம்பர் 23ஆம் தேதி தங்கு என்ற இடத்தை நோக்கி ராணுவ வாகனம் ஒன்று வீரர்களுடன் சென்றது.

அப்போது வடக்கு பகுதியில் செமா என்ற இடத்தில் வளைவில் வாகனம் திரும்பிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் உடனே பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ வாகனத்தில் இருந்த 16 வீரர்கள் உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தற்போது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் வைசாக் என்பவரும் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் இன்றைய தினம் கோவை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.



அங்கு அவரது உடலுக்கு ராணுவ மரியாதை செய்யப்பட்டது.

அப்போது, அட்மினிஸ்ட்ரேடிவ் கமெண்ட் பிஜு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவரது உடல் அமரர் ஊர்தி மூலம் அவரது சொந்த ஊரான பாலக்காடு கொண்டு செல்லப்பட்டது.

Newsletter

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...