தமிழகம் மதவாதம் இல்லாத அரசாக உருவாகும் வரை எந்த கட்சிகளுக்கும் எஸ்.டி.பி.ஐ ஆதரவு கிடையாது என அக்கட்சியின் மாவட்ட தலைவர் அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.
கோவையில் சிம்ப்ளிசிட்டிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
தமிழ்நாடு தற்போது உள்ள நிலைபாட்டில் தகுதியான முதல்வர் இல்லாமல் இருக்கிறது. இதுப்பற்றி அதிமுக கட்சி கலந்து ஆலோசனை செய்யவேண்டும். தமிழக மக்கள் கடந்த 8 மாதங்களாக பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். முன்னாள் தமிழக முதலவர் மறைவில் மர்மம், மத்திய அரசின் 500, 1000 ரூபாய் செல்லாத அறிவிப்பு, ஜல்லிக்கட்டு, ஜாதி கலாவரம், கடலில் ரசாயனம் கலப்பு மற்றும் கொலை, கொள்ளை அதிகரிப்பு போன்ற இன்னல்களால் பொதுமக்கள் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகளுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை, சாமானிய மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருபக்கம் வறட்சியில் விவசாயிகள் தற்கொலை சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. மற்றொரு பக்கம் பொருளாதார பாதிப்பினால் சாமானிய மக்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுபோன்ற சூழலில் தமிழக மக்களுக்கு தகுதியான முதல்வர் இல்லையென்றால் மக்களே இதற்கான தீர்வுகளை காண முற்படுவர். கூடிய விரைவில் தமிழகத்தில் மக்கள் புரட்சி ஏற்படும் சூழல் நிலவும். தற்போது தமிழகம் உள்ள நிலைமையில் மதவாதம் இல்லாத அரசு உருவாக வேண்டும், அதுவரை எந்த கட்சிக்கும் எஸ்.டி.பி.ஐ ஆதரவு அளிக்காது.
இவ்வாறு, எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் அப்துல் காதர் கூறினார்.