கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கொரோனா தொற்றை கையாள்வதற்கான ஒத்திகை நிகழ்ச்சி

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சமீரன் முன்னிலையில் கொரோனா தொற்றை கையாளும் ஒத்திகை நிகழ்ச்சியில் மருத்துவர்கள் முழு கவச உடை அணிந்து பங்கேற்றனர்.


கோவை: சீனா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், இந்தியாவிலும் படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்யும் வகையில், அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்கும்படி மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அதன்படி, கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கையாளுவது, சிகிச்சைகள் அளிப்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இதில் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை எவ்வாறு கையாள வேண்டும், நவீன கருவிகள் கொண்டு எவ்வாறு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளிக்க வேண்டும் என பயிற்சி மேற்கொண்டனர்.



இந்த ஒத்திகையில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் PPE suit எனப்படும் முழு கவச உடை அணிந்து ஒத்திகையில் ஈடுபட்டனர். இதனை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சமீரன் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.



கோவை மாவட்டம் முழுவதும் 6,400 படுக்கை தயார் நிலையில் உள்ளது என்றும் இதில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 3,537 பெட்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோய் தொற்று தடுப்பூசியை பொறுத்தவரை கோவையில் முதல் தவணை தடுப்பூசியை 100 சதவீதமும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 96 சதவீதமும், பூஸ்டர் தடுப்பூசியை 14 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...