கோவையில் டாஸ்மாக் பாரில் சப்ளையர் மீது தாக்குதல் - 7 பேர் கொண்ட கும்பல் கைது

தடாகம் சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில், நண்பர்களுடன் சேர்ந்து பார் ஊழியரை தாக்கி விட்டு, பாரில் உள்ள பொருட்களை சேதப்படுத்திய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் அடுத்த தடாகம் ரோட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாருக்கு, பி.என்.புதூர் விவேகானந்தர் வீதியை சேர்ந்த ரகுராமன் (20), அவரது நண்பர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (23), ஆகிய இருவரும் மது குடிக்க வந்தனர்.

அப்போது குடிபோதையில் இருவரும் பாரில் மது குடித்து கொண்டிருந்த சிலருடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், பாரில் பணிபுரிந்து வரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சேர்மன்ராஜ் (28), இருவரையும் கண்டித்துள்ளார்.

அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ரகுராமனும், அவரது நண்பரும் போன் செய்து மேலும் 7 பேரை அங்கு வரவழைத்துள்ளனர். பின்னர், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பார் ஊழியர் சேர்மன்ராஜை தகாத வார்த்தைகளால் திட்டி, பீர்பாட்டிலால் அவரை தாக்கியுள்ளனர். பின்னர், பாரில் இருந்த மேஜை மற்றும் இருக்கைகளை அடித்து உடைத்து சூறையாடினர்.

இதை தடுக்க முற்பட்ட பார் சீனியர்களை மிரட்டி அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் தலையில் காயமடைந்த சேர்மன்ராஜ் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் பார் ஊழியரை தாக்கி பாரை சூறையாடிய ரகுராமன், மட்டன்கடை ஊழியர் தினேஷ்குமார் (23), ஆர்.ஜி.புதூரை சேர்ந்த நாகேந்திரன் (31), சீரநாயக்கன்பாளையம் திலகர் வீதியை சேர்ந்த தனசேகரன்(31), குறிச்சியை சேர்ந்த நவீன்(28), வீரகேரளத்தை சேர்ந்த ரமேஷ்குமார்(31), ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தை சேர்ந்த பிரவீன்(30) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட ராமு, அரவிந்தன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...