சிங்காநல்லூர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள் மறுக்கட்டுமானம்: லிஃப்ட் வசதியுடன், தரமான கட்டிடங்கள் கட்டப்படும்- அமைச்சர் முத்துசாமி

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சுயநிதி திட்ட குடியிருப்பில் பழுதடைந்த சுமார் 960 வீடுகளை இடித்து அதே இடத்தில் மறுக்கட்டுமானம் பணி அமைப்பது தொடர்பாக அப்பகுதி மக்களிடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கோவை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சுயநிதி திட்ட குடியிருப்பில் பழுதடைந்த வீடுகளை இடித்து அதே இடத்தில் மறுக்கட்டுமானம் செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, சிங்காநல்லூர் பகுதியில் வீட்டு வசதி வாரியத்தால் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 960 வீடுகள் மிக பழுதடைந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதால் மறுக்கட்டுமானம் செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

கடந்த ஆட்சி காலத்தில் அவர்களது கோரிக்கை சரிவர எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதில், பல்வேறு சட்டத் திருத்தங்கள் இருந்தது. இந்த நிலையில், தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், மக்களின் கோரிக்கைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டு, தற்சமயம் அதற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மேலும், இங்கு இருந்த பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைந்து அவர்களே கட்டுமான நிறுவனங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளனர். இங்கு மிக தரமான, பாதுகாப்பான கட்டிடங்கள் கட்டப்படும். மேலும், பராமரிப்பிற்காக சங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை அளிக்க வேண்டும் என முதல்வர் கூறி இருக்கிறார்.

12 இடங்களில் இருந்து இது போன்ற கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளது. அதில், மூன்று நான்கு இடங்களில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களிலும் மூன்று மாத காலங்களில் பணிகள் துவங்கி விடும். 30 மாத காலங்களில் இந்த கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் என கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும், இதற்கான மதிப்பீடு குறித்து நாங்கள் எதுவும் கேட்கவில்லை. அந்த கட்டுமான நிறுவனமே முழுவதும் அனைத்து வேலைகளையும் முடித்து உரிமையாளர்களிடம் வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளோம்.

வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட 8000 வீடுகள் விற்கப்படாமல் உள்ளது. அதனை விற்பதற்கு சில புதிய திட்டங்களை நாம் உருவாக்கி கொடுத்துள்ளோம். விற்றது போக மீதமுள்ள குடியிருப்புகளை வாடகை குடியிருப்புகளாக மாற்றி விடலாம் என ஆலோசித்துள்ளோம்.



பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை கேட்ட பின்பு ஒரு இடத்தில் கட்டிடங்கள் கட்டப்படுகிறது. 16 மாடிகள் கொண்ட குடியிருப்பாக கட்டப்பட்டு வருகிறது.

தற்போது கட்டப்படும் கட்டிடங்களில் லிப்ட் வசதி உள்ளதால், வயதானவர்களுக்கு கீழ் தளத்தில் குடியிருப்புகளை ஒதுக்கி தர வேண்டிய அவசியம் இருக்காது. மொத்தம், 18 லிப்ட் போடப்படும்.

கொசு தொல்லை இருக்காது. காற்று வசதி நன்றாக இருப்பதால், மின்விசிறி பயன்படுத்துவது குறையும். எனவே, மின் கட்டணமும் குறையும், என்றார்.

இதனையடுத்து, அமைச்சர்கள் சிங்காநல்லூர் உழவர் சந்தை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...