இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி ஐ ஐ) கோவை கிளை சார்பில் தொழில் நிறுவனங்களுக்கான வரி குறித்த ஒருநாள் மாநாடு இன்று கோவை ரெசிடென்சி விடுதியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் வரிகள் குறித்த கையேட்டினை வருமான வரி முதன்மை ஆணையர் கிருஷ்ணகுமார் வெளியிட்டார். இதனை இந்திய தொழில் கூட்டமைப்பின் கோவை மாவட்ட கிளைத் தலைவர் நேத்ரா ஜே.எஸ்.குமார் பெற்றுக் கொண்டார்.

நிறைவாக, இணை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசுவாமி நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் கார்த்திகேயன், வருமான வரி இணை ஆணையர் சிவகுமார், முன்னாள் சி பி டி டி தலைவர் எஸ்.எஸ்.என்.மூர்த்தி, சி ஐ ஐ முன்னாள் தலைவர் இளங்கோ, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கபில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
