இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி நிறுவனமான ஸ்ரீ ராம் ஆட்டோமால், பழைய வாகன விற்பனை மையத்தினை கோவையல் துவங்கியுள்ளது. இந்த விற்பனையகம் இந்தியாவில் 65-வது ஆகும்.

கோவையில் துவங்கப்பட்டுள்ள இந்த விற்பனை மையமானது தமிழகத்தில் 5-வது கிளையாகும். கோவையில் இருந்து பெருந்துறை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இந்த மையம் அமைந்துள்ளது. இதனால், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயனடைவர்.
இந்த விற்பனை மையத்தின் துவக்கவிழாவின் போது ஏல விற்பனையும் நடைபெற்றது. இதில் 250 பழைய வாகனங்களும், கட்டுமானத் துறை வாகனங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டது. இதில், 110 வாகனங்கள் விற்பனையானது.
இதில் வாகனம் வாங்கியவர்களுக்கு ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம் கடனுதவி வழங்கியது.
இந்த துவக்கவிழாவின் போது ஸ்ரீராம் ஆட்டோமால் அமைந்துள்ள வளாகத்தில் ஏராளமான மரங்கள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும், 20 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.