பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன் மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு ‘மஞ்சப்பை’ விருதுகளுடன் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் அறிவிப்பு.
கோவை: "மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் சட்டப் பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு "மஞ்சப்பை விருதுகள்" வழங்கப்படும்.
அதன்படி ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு (Plastic Carry bags) மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும்.
விருது பெறும் பள்ளி, கல்லூரி மற்றும் வணிக நிறுவனங்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் ([email protected]) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
மஞ்சப்பை விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகள்:-
1. விண்ணப்ப படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர் / நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும்.
2.கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு (CD) பிரதிகள் இரண்டினை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.