பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி, கோவை எப் ஐ சி சி ஐ மகளிர் அமைப்பு ஆகியவை இணைந்து தொழில் முனைவோர்களுக்கான மேம்பாட்டு திட்டப் பயிற்சியினை வரும் பிப்ரவரி 16ம் தேதி முதல் நடத்தவுள்ளது.
அகமதாபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் இ டி ஐ அமைப்பின் சார்பில் நடத்தப்படும் இந்த பயிற்சியானது தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது. என் எஸ் டி இ டி பி, டி எஸ் டி ஆகிய அமைப்புகளும் இந்த திட்டத்திற்கு நிதிவுதவி அளித்துள்ளனர்.
இப்பயிற்சியானது தொழிலை திறம்பட நடத்துவது, நிதி பெரும் திட்டங்கள், தொழிலை தேர்ந்தெடுத்தல் மற்றும் அத்தொழிலின் வளர்ச்சியை அடைதல், தொழில் முனைவோர்களுக்கான திறன், திட்டம் குறித்து அறிக்கை தயாரித்தல், சந்தை குறித்து ஆராய்தல், தொழிலை நிர்வகித்தல் மற்றும் வரி குறித்தான நடைமுறைகள் ஆகியவை குறித்து இப்பயிலறங்கில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி பெற பி.எஸ்சி, பி.டெக், பிஇ பட்டதாரிகள், அரசு அங்கீகாரம் பெற்ற டிப்ளமோவில் 2 மற்றும் 3 வருட பயிற்சி மேற்கொண்டவர்கள் என 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து தரப்பினரும் பங்குபெறலாம்.
இப்பயிற்சியில் சேர விரும்புவோர் அவர்களது முழு விபரங்களையும் [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு 9363104733, 9443760648, 9486710231, 9361333111, 9443338935 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.