முன்னாள் போப் ஆண்டவர் மறைவு - கோவையில் சிறப்பு பிரார்த்தனை

முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் மறைவையொட்டி, அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டி, கோவை பெரிய கடைவீதிபகுதியில் உள்ள தூய மைக்கல் அதித்தூதர் தேவலாயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.



கோவை: முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட்(95 வயது), உடல்நலக் கோளாறால் கடந்த டிச.31ஆம் தேதி மறைந்தார்.



இந்நிலையில் அவரது மறைவையொட்டி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இரங்கல் கூட்டம் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தி வருகின்றனர்.



இதன் தொடர்ச்சியாக, கோவை, பெரிய கடை வீதி பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித் தூதர் பேராலயத்தில் மறைந்த போப்பாண்டவரின் ஆன்மா சாந்தியடைய சிறப்பு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.



மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனையும் நடைபெற்றது.



அஞ்சலி பிரார்த்தனை கூட்டத்தில் ஜான் ஜோசப் ஸ்தனிஸ், மேல்க்யூர் பிரான்சிஸ் ஜோசப், ஜார்ஜ் தனசேகர் மறை மாவட்டத்தில் உள்ள அருட் தந்தையர்கள், மத போதகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...