கோவை நஞ்சுண்டாபுரத்தில் 4 ஆண்டுகளாக தொடர்ந்த மின்சார பிரச்சினை - அமைச்சர் உத்தரவால் தீர்வு

கோவையில் உள்ள நஞ்சுண்டாபுரத்தில் ரூ.7.5 லட்சம் மதிப்பில் புதியதாக டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டு, நான்கு ஆண்டுகளாக இருந்த மின் பிரச்சனை சரி செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் ஊராட்சி, திருவள்ளுவர் நகர் பிருந்தாவன் வீதி பகுதியில் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார பிரச்சனை இருந்து வந்தது.



இது குறித்து அப்பகுதி பலமுறை கோரிக்கைகள் விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கவனத்திற்கு கொண்டு சொல்லப்பட்ட நிலையில் உடனடியாக அங்குள்ள பிரச்சனையை களைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.



இதன் அடிப்படையில், அப்பகுதியில் சுமார் ரூ.7.5 லட்சம் மதிப்பில் புதியதாக டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டு நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இதனை விரைந்து முடித்துக் கொடுத்த கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவிக்கு, மாவட்ட நிர்வாகிகள், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய நிர்வாகிகள், பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.



இதன் துவக்க நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் சி.எம்.கே குமார், கோவை வடக்கு மாவட்ட திமுக கழக துணைச் செயலாளர் அசோக் பாபு தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், முன்னாள் நஞ்சுண்டாபுரம் ஊராட்சி தலைவர் சுந்தர்ராஜ், துணை தலைவர் திருநாவுக்கரசு, கிளை செயலார் குமாரசாமி, திமுக இளைஞரணி உறுப்பினர் விபின் உள்ளிட்ட ஒரு கலந்து கொண்டு அப்பகுதி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...