திருப்பூரில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்க நடவடிக்கை! - புதிய காவல் ஆணையர் உறுதி

திருப்பூர் மாநகரின் புதிய காவல் ஆணையராக பிரவீன்குமார் அபினவு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கடந்த 2008 ஆம் ஆண்டு உதயமானதற்கு பின்னர் 2013 ஆம் ஆண்டு மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது.



இதில் திருப்பூர் மாநகர காவல் துறையின் 11 வது காவல் ஆணையராக சேலம் சரகத்தில் பணியாற்றி வந்த டிஐஜி பிரவீன் குமார் அபினவு இன்று திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன்குமார் அபினவு, திருப்பூர் மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் வரும் பொதுமக்களின் குறைகளை தீர்க்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கப்படும் என்றும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை தடுப்பதற்கு முற்றிலுமாக பணியாற்றுவேன் என்றும் கூறினார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...