கோவை ஜுவல் ஒன் நிறுவனத்தில், 'பை டைமண்ட் ஜுவல்லரி' எனும் புதிய பிரிவு துவக்கப்பட்டு உள்ளது. கிராஸ்கட் ரோட்டில் அமைந்து உள்ள ஜுவல் ஒன் நிறுவனத்தில், 500 சதுர அடி பரப்பளவில், 'பைன் டைமண்ட் ஜுவல்லரி' என்ற வைர விற்பனை பிரிவு, புதியதாக துவக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜுவல் ஓன் முதன்மை நிர்வாக இயக்குனர் பி.ஜி.கிஷோர் பேசுகையில்:– எம்ரால்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் ஜுவல் ஒன் நிறுவனத்தின், சிறந்த கட்டமைப்பு மற்றும் நவீன இயந்திரங்கள் மூலம், வைர நகை வடிவமைப்பு மற்றும் விற்பனையில், எங்கள் நிறுவனம் முன்னிலையில் இருந்து வருகிறது.
எங்களது நிறுவனத்தில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடிவமைப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வைரம் சார்ந்த அனைத்து பணிகளும், எங்கள் நிறுவனத்திலேயே நடைபெறுவதனால், குறைந்த விலையில், வைரங்களை விற்பனை செய்ய முடிகிறது. 3.5 லட்சம் டிசைன்கள் தமிழகத்தில் 13 இடங்களில், ஜுவல் ஒன் கிளைகள் செயல்பட்டு வருகிறது. இதுதவிர, மும்பை, கேரளா, பெங்களூர், சிங்கப்பூர் மற்றும் மலேசிய உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளது.
புதிய பிரிவுகளில், நவீன மற்றும் பாரம்பரிய, கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட, தங்கம் மற்றும் பிளாட்டினத்துடன் கூடிய, 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வடிவமைப்பிலான, வைர நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் மனநிறைவே, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சீனிவாசனின், முக்கிய குறிக்கோளாகும். எனவே, எங்களது வாடிக்கையாளர்களுக்கு, நாங்கள் விற்பனை செய்யும் வைர நகைகளுக்கான தர சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதில், வைரத்தின் தரம், வண்ணம், எடை ஆகியவை இடம்பெற்றிருக்கும். மேலும், வாடிக்கையாளர்கள் வழங்கும் வடிவமைப்பினை 20 நாட்களில் செய்து தருகிறோம். துவக்க விழாவை முன்னிட்டு, ஒரு காரட் சவர நகைக்கு, ரூ.5 ஆயிரம் வீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

விழாவில், நிர்வாக துணை பொதுமேலாளர் முத்துக்குமார், வைர பொருட்களின் தலைமை அதிகாரி சஞ்சேஷ், மார்க்கெட்டிங் தலைமை அதிகாரி விஜயக்குமார், மேலாளர் வாசுதேவ ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.