திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு

திருப்பூரில் கணவர் கொடுமை குறித்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த இளம்பெண், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது மகள் சௌந்தர்யாவை, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவரது உறவினரான கோவை மாவட்டத்தை சேர்ந்த மனோகர் என்ற கட்டிட தொழிலாளிக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இதனிடையே, குடிக்கு அடிமையான மனோகர் திருமணம் ஆனது முதல் சௌந்தர்யாவை அடித்து உதைத்து துன்புறுத்திவந்ததாகத் தெரிகிறது. இது குறித்து நியாயம் கேட்கச் சென்ற மஞ்சுளாவையும் மனோகர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, சௌந்தர்யா மற்றும் அவரது தாய் மஞ்சுளா ஆகியோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இரண்டு மாதங்களாகியும், காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் சௌந்தர்யா, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.



அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், சௌந்தர்யாவை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

திருமணமான நான்கு மாதங்களிலேயே இளம்பெண் ஒருவர், குடிகார கணவரின் கொடுமை தாங்காமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...