பஞ்சாங்கங்கள் பல அதில் இன்று அனேகமானோர் பின்பற்றக்கூடிய பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கம் ஆகும். திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி 26 ஆம் தேதி இரவு 7.29 மணியளவில் சிம்ம லக்னம் தனுசு ராசி பூராட நட்சத்திரம் 4 ஆம் பாதத்தில் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சஞ்சரிக்கிறார். அனைத்து கிரகங்களுக்கும் தலைவன் சூரியன். சூரியனின் மகனே சனி பகவான். கிரகங்களுக்கு மிக முக்கியமான கிரகம் சனி கிரகம். சனி பகவான் மட்டுமே ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு இரண்டரை ஆண்டுகள் எடுத்து கொள்கிறார் சனிபகவான் மட்டுமே ஒரு ராசியில் அதிக காலம் தங்கியிருப்பார். முழுமையாக 12 ராசிகளையும் அவர் சுற்றி வர 30 ஆண்டுகள் எடுத்துக்கொள்வார். அதிக காலம் எடுத்து கொள்வதால் இவரை மந்தகாரகர் என்றும் அழைப்பர்.
சனி பகவானின் திசை மேற்கு. வாரநாட்களில் சனிபகவானின் கிழமை சனிக்கிழமை. சனிகிரகத்தை தாது கிரகம் என்றும் கூறுவர். பஞ்சபூதத்தில் வாயு ஆகும். சனிபகவானின் வாகனம் காக்கை. கிரகங்களில் சனிபாகவனுக்கு மட்டுமே சிவபெருமான் "ஈஸ்வர" பட்டத்தை கொடுத்தார். அதனால் "சனீஸ்வரன்" என்ற பெருமைக்குரியவர் சனிபகவானே. மகரம், கும்பம் சனிபகவானுக்கு சொந்த வீடு. சனிபகவானின் மூல திரிகோணம் கும்பம். பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கு அதிபதி சனிபகவான். சனிபகவான் துலாம் ராசியில் உச்சம் பெறுகிறார், மேஷம் ராசியில் நீச்சம் அடைகிறார்.
ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ராசியில் நட்பு பெறுகிறார். கடகம், சிம்மம் மற்றும் விருச்சிகத்தில் பகை பெறுகிறார். எமனின் மூத்த அண்ணன் சனிபகவான். கருநீலம் நிறம் சனிபகவானுடையது. சூரியன், சந்திரன், செவ்வாயிற்கு சனிபகவான் பகை உணர்வோடு இருக்கிறார். சுக்கிரன், புதன், ராகுகேதுவுடன் நட்பு பெற்று நண்பனாக திகழ்கிறார். குருபகவானிற்கு சமநிலையில் இருக்கிறார். இரவு காலத்து பித்ருகாரகன் சனிபகவானே.
சனிபகவான் ஆயுள்காரகன் ஆயுள், தொழில், அடிமைத்தனம், இரும்பு, துவர்ப்பு, கடுகு, எள்ளு, எண்ணெய், கடன், தாழ்ந்த பெண்களுடன் உறவு, எருமை, சிறைப்படுத்துதல், வேட்டைக்காரர், மரவேலை, விவசாயம் மீன் தொழில், வயோதிகர், ஏழை, விதவை, பொறுமை, உண்மை, ஆழ்ந்த சிந்தனை, பிடிவாதம் போன்றவற்றிக்கு காரகத்துவம் பெற்றவர்.
ராசிக்கு - முன் பின் 71/2 சனி
முன் - விரைய சனி
ராசியில் - ஜென்ம சனி
பின் - குடும்ப சனி
4 -ல் - அர்த்தாஷ்டம சனி
7- ல் - கண்டக சனி
8 -ல் - அஷ்டமத்து சனி
ஜாதகத்தை ஆராயும் போது லக்ன ரீதியாகவும் சந்திர (இராசி) ரீதியாகவும் ஆராய்தல் அவசியம். பஞ்சபூத அடிப்படையில் ஆராய்தல் வேண்டும். நட்சத்திரத்திற்கு 3 ,5 ,7 ,12 ,14 ,16 ,21 ,23 ,25 ஆம் நட்சத்திரத்தில் சனிபகவான் வரும் போது விழிப்புணர்ச்சி மிகவும் தேவை. அதே போன்று 4 ,6 ,8 ,9 ,13 ,15 ,17 ,18 ,22 மற்றும் 24 ஆம் நட்சத்திரங்களுக்கு வரும் போது அற்புதமான பலனை தருவார் சனிபகவான். குருபார்வை இருக்குமேயாயின் கூடா நிலை குறையும். கோச்சாரம் ஒன்றை மட்டுமே வைத்து பலன் கூறக்கூடாது. ஒருவருடைய ஜாதகத்தில் சனிபகவான் இருக்கும் நிலை, நட்பு நிலையா, பகை நிலையா, சம நிலையா என்று ஆராய்தல் வேண்டும். சனிபகவான் நிற்கும் நட்சத்திரம் மற்றும் ராசியை கணித்தல் அவசியம். தற்போதைய ஒருவரத வயது, தசா புத்தி, அந்திரம் முடிந்தால் சித்திரமும் வக்ரநிலையையும் ஆராய்தல் வேண்டும். இந்த காலத்தில் குருபகவான் மற்றும் ராகு கேது நிலையை ஆராய்தல் வேண்டும். இதன்பிறகே உண்மையான முழுமையான பலனை தெரிந்துக்கொள்ள முடியும்.
சனிபகவான் என்ற உடனேயே அனைவருக்கும் தோன்றுவது பயம் மட்டுமே. பொதுவாக சனிக்கிரகம் ஒரு அசுப கிரகம் என்றும் பலவிதமான கொடுமைகளை செய்ய கூடியவர் என்றும் பெரும் பயம் மக்களிடையே நிலவி கொண்டுள்ளது. இது மிகவும் தவறான ஒரு கருத்து. சனிபகவானுக்கும் சுப மற்றும் அசுப தன்மைகள் உண்டு.
சனிபகவான் சத்தியத்தை கடைப்பிடிக்கவும், நேர்மையாக இருக்கவும், உண்மையாக நடந்து கொள்வதற்கும், மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதற்கும், நியாயத்துடன் செயல்படுவதற்கும், தரத்தோடு வாழ்வதற்கும், உணவு கட்டுப்பாட்டை உணர்த்துவதற்கும், கோபத்தை குறைப்பதற்கும், ஆத்திரத்தை கட்டுப்படுத்துவதற்கும், உடலில் உள்ள தேவையில்லா கழிவு பொருட்களை வெளியேற்றுவதற்கும், பக்குவமாக நடந்து கொள்வதற்கும், பொறுமையுடன் செயல்படுவதற்கும், எதிர்ப்பு சக்தியை உடம்பில் அதிகரிப்பதற்கும், நரம்பு, எலும்பு, கால்கள், பாதம், நாளமில்லா சுரப்பிகள், முதுகு தண்டுவடம், நோய் எதிர்ப்பு தன்மை போன்ற மனம் மற்றும் உடல் சம்பந்தமான அனைத்தையும் சீர்படுத்தி, முன்னோர்களின் பூர்வ புண்ணிய பலன்களை தருபவராகவம், ஒரு அழகான கிரகமாகவும் சனிபகவான் திகழ்கிறார் என்பதை மறந்து விடக்கூடாது.
சனிபகவானின் உதவி இல்லாமல் பெரும் காரியங்களை சாதிக்க முடியாது. எதையும் தைரியமாக செயல்படுத்த சனிபகவான் மிகவும் தேவை. எதையும் தீர்க்கமாக ஆலோசித்து தைரியமாக செயல்பட்டு பெரும் வெற்றியை அடைவதற்கு சனிபகவானின் உதவி மிகவும் தேவை. ஒன்றை ஆராய்ச்சி செய்வதற்கும் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுப்பிடிப்பதற்கும் நல்ல குருவாக திகழ்வதற்கும் சரிவர பெரிய பெரிய முடிவுகள் எடுப்பதற்கும் சமுதாய சீர்திருத்தங்களுக்கும் சனிபகவானே முக்கியமானவர் ஆவார்.
பெரும் தொழில் அதிபராக வெற்றி பெறுவதற்கும் பெரும் சொத்துக்கள் சேர்ப்பதற்கும் அதை சரிவர பராமரிப்பதற்கும் குடும்பம் முதல் நாடு வரை நல்வழியில் நடத்தி செல்வதற்கும் சனிபகவானால் மட்டுமே முடியும்.
ஞான மார்க்கத்திற்கும், யோக மார்க்கத்திற்கும் பலவிதமான சித்திகள் அடைய சனிபகவானின் உதவி தான் அத்தியாவசியமானதாகும். பல விதமான சிரமங்களை அனுபவித்தாலும் இறுதியில் மனம் மற்றும் உடலை சீரமைத்து இறுதியில் யோகத்தை கொடுத்து செல்வார் சனிபகவான். கடுமையானவர் என்பது உண்மையே. ஆனால் அந்த கடுமையே ஒருவரை நல்வழிப்படுத்தும். கெட்டவர்களுக்கும், கெடுதல் செய்பவர்களுக்கும் ஒரு போதும் சனிபகவான் ஒத்துழைக்கமாட்டார். அவருடைய காலத்தில் அவர்களை கவிழ்த்து அவர்கள் திருந்தும் வரை கஷ்டங்களை கொடுத்து திருத்தியே தீர்வார். ஆகவே மனித குலத்தை மேம்படுத்த கூடியவர் சனிபகவான் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
(இனி சனிப்பெயர்ச்சி எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலனை செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்)
மேஷம்

அஸ்வினி - 1 ,2 ,3 ,4 பாதங்கள்
பரணி - 1 ,2 ,3,4 பாதங்கள்
கிருத்திகை - 1 ஆம் பாதம்
உங்கள் ராசிநாதன் செவ்வாய். செவ்வாய் என்றாலே துணிச்சல், தைரியம், தன்னபிக்கை, எதையும் சாதித்து காட்டும் குணம் படைத்தவர். மேஷ ராசிக்காரர்களுக்கு தைரியம் தங்களின் இரத்தத்திலேயே கலந்த ஒன்று. தைரியமும், துணிவும் நிறைந்து இருந்தாலும் பொறுமையும், பண்பும் நிறைந்து இருக்கும், பிறந்ததர்க்கு ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் என்றும் மனதில் நிற்கும் மேஷ ராசி அன்பர்களே!
மேஷம் ராசி அன்பர்களுக்கு இது ஒரு பொன்னான காலம் என்றே சொல்ல வேண்டும் சென்ற 5 வருடங்களாக கண்டக சனியினாலும் அஷ்டமத்து சனியினாலும் பெரும் வேதனைகளையும், துன்பங்களையும், மனக்கசப்புகளையும் சந்தித்து இருப்பீர்கள். தற்போது இந்த நிலை அனைத்தும் மாறி சீர்படுத்தப்பட்டு நன்மைகளுக்கு வழிவகுக்கக்கூடிய காலமாகவே அமையப்போகிறது. வருமானங்கள் அதிகரிக்கும். தொழில் சம்மந்தமாக எடுத்த முயற்சிகள் வெற்றி பெரும். சேமிப்புகள் பெருகும், உயர் பதவிகள் கிடைக்கும், திருமண வைபவங்கள் நடக்க சிறந்த காலமாகும். நிலம், வீடு சம்மந்தமான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மனம் குதுகலமாக இருக்கும். மனம் அமைதியுறும். வாழ்க்கை இலட்சியங்களை அடைவதற்கு வழிவகுத்து கொடுக்கும். வீடு வாங்குவதற்கும் கட்டுவதற்கும் இது யோகமான காலம். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு சனிபகவான் பெயர்ச்சி ஆவதால் தெய்வீக அனுகூலம் கிடைக்கும். பூர்வீக சொத்துகளினால் இலாபம் உண்டு. பெற்றோர்களிடமிருந்து அன்பும், ஆதரவும் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை பெருகும். கடன் பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வெளிநாடு சுற்றுலா செல்ல வாய்ப்பு உண்டு. கணவன், மனைவி சேர வாய்ப்புகள் அதிகம். புதிய தொழில் தொடங்க நல்ல தருணம் இது.
வேலை பார்க்கும் இடத்தில் எல்லோரும் அனுசரித்து செல்வர். கூட்டாளிகளுடன் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். அரசு அனுகூலங்கள் கிடைக்கும். நண்பர்கள் ஓடி வந்து உதவுவர். குழந்தைகள் மேம்பட செய்வதற்கான செலவுகள் நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் அகலும். மாணவர்களுக்கு நன்றாக படிப்பதற்கு இது உகந்த காலமாகும். கலைஞர்களுக்கும், ஆராய்ச்சி துறை சேர்ந்தவர்களுக்கும் புகழும் பாராட்டும் வரக்கூடிய காலமாகும். தகப்பனாரின் உடல்நிலையில் கவனம் தேவை. திருப்திகரமான காலம் இது என்றாலும் காலதாமதம் ஏற்படும் என்பதை நினைவில் கொண்டு திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி நடை போடும் சூழல் ஏற்படும்.
பரிகாரம்:
1.சனி பகவான் கோவிலுக்கு தங்களுக்கு உகந்த நாளில் சென்று வழிபட்டு வருவது சிறப்பு.
2.முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, கர்மாக்களை முறையுடன் செய்து வருதல் வேண்டும்.
கவனத்திற்கு:
கோச்சாரம் ஒன்றை மட்டுமே வைத்து பலன் கூறக்கூடாது. ஒருவருடைய ஜாதகத்தில் சனிபகவான் இருக்கும் நிலை, நட்பு நிலையா, பகை நிலையா, சம நிலையா என்று ஆராய்தல் வேண்டும். சனிபகவான் நிற்கும் நட்சத்திரம் மற்றும் ராசியை கணித்தல் அவசியம். தற்போதைய ஒருவரது வயது, தசா புத்தி, அந்திரம் முடிந்தால் சித்திரமும் வக்ரநிலையையும் ஆராய்தல் வேண்டும். இந்த காலத்தில் குருபகவான் மற்றும் ராகு கேது நிலையை ஆராய்தல் வேண்டும். இதன்பிறகே உண்மையான முழுமையான பலனை தெரிந்துக்கொள்ள முடியும்.
ரிஷபம்

கிருத்திகை - 2 ,3 ,4 , பாதங்கள்
ரோகிணி - 1 ,2 ,3 ,4 பாதங்கள்
மிருகசீரிஷம் - 1,2 பாதங்கள்
உங்கள் ராசிநாதன் சுக்ரன். கலை நயம் மிக்கவர், உற்சாகத்துடன் செயல்படும் எண்ணம் உடையவர். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பவர். அனைத்து சுகங்களையும் சுகமாக அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர். கலைகளில் ஆர்வம் கொண்டவர். அழகை ரசிக்க தெரிந்தவர். தன்னை சுற்றி தூய்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்.வசீகர சக்தி உடைய ரிஷப ராசி அன்பர்களே!
உங்கள் ராசியில் 7 -ஆம் வீட்டில் கண்டக சனியாக சஞ்சரித்து வந்த சனிபகவான் 8 -ஆம் வீட்டில் அஷ்டமத்து சனியாக சஞ்சரிக்க போகிறார். அலைச்சல்கள் அதிகரிக்கும் காலம் இது. திட்டமிட்டு செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். எதிர்ப்பு சக்தி குறைய கூடிய காலம் இது. அதனால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடிய பழக்கவழக்கங்கள் முக்கியம். உணவு கட்டுப்பாடு அவசியம். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். கடன் சுமை அதிகரிக்கும். எதையும் ஆலோசித்து பேசுதல் வேண்டும். செலவுகளை குறைத்து கொள்ளுதல் அவசியம். யாருடன் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது சிறப்பு. தடைகள் பல ரூபத்தில் சந்திக்க நேரிடலாம். வேலைப்பளு அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்கு உண்டான தனவரவு திருப்தியாக இருக்கும். உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து செல்லுதல் அவசியம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. கூட்டுத்தொழில் செய்பவர்கள் கணக்கு வழக்குகளில் கவனமாக இருத்தல் வேண்டும். புதிய நபர்களுடன் நட்பு கொள்வதில் கவனம் தேவை. மிக நெருங்கியவர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. பணம் கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கணவன், மனைவி இடத்தில் ஒற்றுமை குறைய வாய்ப்பு உண்டு. கண்முடித்தனமாக யாரையும் நம்புதல் கூடாது. உடலை சுத்தமாக வைத்திருத்தல் அவசியம். மனதை தெளிவாக வைத்திருத்தல் அவசியம். சிக்கனமாக செலவு செய்தல் அவசியம். மாணவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது. அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லுதல் அவசியம்.
அவசரமாக செயல்படுவதை தவிர்த்தல் வேண்டும். ஆத்திரம் கோபத்தை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டிய காலம். கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய காலம் இது. வீண் வம்பு வழக்குகளில் கவனம் தேவை. அரசு துறைகளுடன் கவனம் தேவை. பழிவாங்குதல் என்ற எண்ணமே இருத்தல் கூடாது.
பரிகாரங்கள்:
1. சனிபகவானின் தியான மந்திரம், மூலமந்திரம் மற்றும் காயத்திரி மந்திரங்களை உச்சரித்தல்.
2. காக்கைக்கு உணவு அளித்தல்.
3. உடல் ஊனமுற்றோருக்கு உதவுதல்.
4. ஹனுமன் சாலிசா மற்றும் ஸ்ரீ்விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்தல்.
5. சனி பகவான் கோவிலுக்கு தங்களுக்கு உகந்த நாளில் சென்று வழிபட்டு வருவது சிறப்பு.
6. சிவபெருமானை வழிபடுதல், தான தருமம் செய்தல்.
7.முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, கர்மாக்களை முறையுடன் செய்து வருதல் வேண்டும்.
8.யோகாசனம் மற்றும் முத்ராக்களை செய்தல்.
9. இரும்பு சக்தி அதிகமாக உள்ள உணவு பொருட்களை உட்கொள்ளுதல்.
10. தரமான தேவையான அளவில் நீலரத்தினம் முறைப்படி சுத்திகரிக்கப்பட்டு உகந்த உலோகத்தில் உகந்த நாள், நட்சத்திரம்பார்த்து அணிவது சிறப்பு.
11. “Take it easy policy” பின்பற்றவும்.
12. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வருவது சிறப்பு.
13.கல்விக்காக உதவுதல்.
கவனத்திற்கு :
கோச்சாரம் ஒன்றை மட்டுமே வைத்து பலன் கூறக்கூடாது. ஒருவருடைய ஜாதகத்தில் சனிபகவான் இருக்கும் நிலை, நட்பு நிலையா, பகை நிலையா, சம நிலையா என்று ஆராய்தல் வேண்டும். சனிபகவான் நிற்கும் நட்சத்திரம் மற்றும் ராசியை கணித்தல் அவசியம். தற்போதைய ஒருவரது வயது, தசா புத்தி, அந்திரம் முடிந்தால் சித்திரமும் வக்ரநிலையையும் ஆராய்தல் வேண்டும். இந்த காலத்தில் குருபகவான் மற்றும் ராகு கேது நிலையை ஆராய்தல் வேண்டும். இதன்பிறகே உண்மையான முழுமையான பலனை தெரிந்துக்கொள்ள முடியும்.
மிதுனம்

மிருகசீரிஷம் - 3, 4 பாதங்கள்
திருவாதிரை - 1, 2, 3, 4 பாதங்கள்
புனர்பூசம் - 1, 2 ,3 பாதங்கள்
உங்கள் ராசிநாதன் புதன். எதையும் ஆராய்ந்து செயல்படக்கூடியவர்.பேச்சு திறமை நிறைந்தவர். ஒழிவு மறைவு இல்லாதவர். புத்தி கூர்மையினால் தன் வசப்படுத்த கூடியவர். சூழ்நிலை சந்தர்பர்த்திற்கு தகுந்தவாறு பலரிடம் பலவாறு மாறக்கூடியவர். எதையும் சாதிக்கும் குணமுடையவர், புகழை விரும்புபவர். வெற்றி நடை போடுபவர், சாதித்தே தீர வேண்டும் என்ற பிடிவாத குணத்தை கொண்ட மிதுன ராசி அன்பரகளே!
இந்த சனிப்பெயர்ச்சியில் சனிபகவான் 7-ஆம் பாகத்தில் சஞ்சரிக்கிறார். இதை கண்டக சனி என்பர். கண்டக சனியின் போது பொதுநல விஷயங்களில் கவனம் செலுத்தி ஆவணம் செய்ய வேண்டிய நேரம் இது. மாணவர்களுக்கு உயர் கல்வி பயில வாய்ப்புகள் கிடைத்தாலும் அதிக தடைகளை சந்திக்க நேரிடும். படிப்பில் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலம் இது. அனைத்து விசயங்களிலும் மந்த தனத்தை விட்டு சுறுசுறுப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும். கல்விக்காக கடன் கிடைத்தாலும் அதில் திட்டமிட்டு செயல்படுதல் முக்கியம். வயிறு, கால், பாதம், ஜீரண உறுப்புகள், தலை, கண் போன்றவற்றில் கவனம் தேவை. அறுவை சிகிச்சைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரித்து கொள்ள வேண்டும். எந்த வேலையையும் காலதாமதம் இன்றி உடனே செய்ய வேண்டும். உயர் அதிகாரிகளுடன் கவனம் தேவை. அடிக்கடி வேலை மாற வேண்டிய எண்ணம் மேலோங்கும். அவ்வாறு மாறாமல் இருப்பது சிறப்பு. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். ஆனால் தன் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும். புதிய தொழில் அமைய வாய்ப்பு உண்டு. ஆனால் தேவைக்கேற்ப முதலீடு செய்தல் அவசியம். இலாபம் ஓரளவு கிடைக்கும். பங்கு சந்தையில் முதலீடு செய்யும் போது கவனம் இரட்டிப்பாக இருத்தல் வேண்டும். அரசுவழி கணக்கு வழக்குகளில் கவனம் தேவை. எதிரிகள் தலையிடுவதற்கான நேரம் இது. பலன் கிடைப்பதற்கு அதிகமாக உழைக்க நேரிடும். பழைய இடத்தை விற்று புதிய இடம், வீடு வாங்குவதற்கான யோகம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உண்டு. சகோதர சகோதரிகளுடன் அன்பும் ஆதரவும் இருந்து வரும் என்றாலும் தேவையற்ற பிரச்சனைகள் வந்து சேரலாம். அதனால் நெருங்கிய உறவினர்களை அனுசரித்து செல்லுதல் அவசியம். தாய்வழி ஆதரவு கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமையும்.
திருமண தடை விலக வாய்ப்பு உண்டு. கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. காதல் விவகாரங்களில் ஈடுபாடுகள் அதிகமாகி அதனால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கடன் கொடுப்பதோ ஜாமீன் போடுவதோ கூடாது. மற்றவர்களின் பிரச்சனையில் தலையிடக்கூடாது மனதை நிதான நிலையில் வைத்துக்கொள்ள தெய்வீக வழிபாடுகள் தேவை, மறைமுகமான எதிரிகளை சந்திக்க நேரிடும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு ஒரு சிலருக்கு உண்டு, நண்பர்கள் உதவ வேண்டும் என்று நினைத்தாலும் முடிவில் அது இயலாது போக வாய்ப்பு உண்டு உடலில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் காலம் தாழ்த்தாமல் மருத்துவரிடம் செல்வது நல்லது
பரிகாரங்கள் :
1. சனிபகவானின் தியான மந்திரம், மூலமந்திரம் மற்றும் காயத்திரி மந்திரங்களை உச்சரித்தல்.
2. காக்கைக்கு உணவு அளித்தல்.
3. உடல் ஊனமுற்றோருக்கு உதவுதல்.
4. ஹனுமன் சாலிசா மற்றும் ஸ்ரீ்விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்தல்.
5. சனி பகவான் கோவிலுக்கு தங்களுக்கு உகந்த நாளில் சென்று வழிபட்டு வருவது சிறப்பு.
6. சிவபெருமானை வழிபடுதல், தான தருமம் செய்தல்.
7.முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, கர்மாக்களை முறையுடன் செய்து வருதல் வேண்டும்.
8.யோகாசனம் மற்றும் முத்ராக்களை செய்தல்.
9. இரும்பு சக்தி அதிகமாக உள்ள உணவு பொருட்களை உட்கொள்ளுதல்.
10. தரமான தேவையான அளவில் நீலரத்தினம் முறைப்படி சுத்திகரிக்கப்பட்டு உகந்த உலோகத்தில் உகந்த நாள், நட்சத்திரம் பார்த்து அணிவது சிறப்பு.
11. “Take it easy policy” பின்பற்றவும்.
12. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வருவது சிறப்பு.
13.கல்விக்காக உதவுதல்.
கவனத்திற்கு:
கோச்சாரம் ஒன்றை மட்டுமே வைத்து பலன் கூறக்கூடாது. ஒருவருடைய ஜாதகத்தில் சனிபகவான் இருக்கும் நிலை, நட்பு நிலையா, பகை நிலையா, சம நிலையா என்று ஆராய்தல் வேண்டும். சனிபகவான் நிற்கும் நட்சத்திரம் மற்றும் ராசியை கணித்தல் அவசியம். தற்போதைய ஒருவரது வயது, தசா புத்தி, அந்திரம் முடிந்தால் சித்திரமும் வக்ரநிலையையும் ஆராய்தல் வேண்டும். இந்த காலத்தில் குருபகவான் மற்றும் ராகு கேது நிலையை ஆராய்தல் வேண்டும். இதன்பிறகே உண்மையான முழுமையான பலனை தெரிந்துக்கொள்ள முடியும்.
கடகம்

புனர்பூசம் - 4 ஆம் பாதம்
பூசம் - 1 , 2 , 3 , 4 பாதங்கள்
ஆயில்யம் - 1 , 2 , 3 , 4 பாதங்கள்
உங்கள் ராசிநாதன் சந்திரன் அனைத்து விஷயத்திலும் பணிந்து, நெளிந்து சாதிக்கக்கூடியவர், புகழுக்காக எதையும் செய்ய மனம் நாடும் நல்ல மனம் கொண்டவர், உதவி என்று கேட்போர்க்கு உற்ற நண்பர், வார்த்தை ஜாலத்தில் கில்லாடி, கற்பனை திறன் அதிகமிக்கவர், தன் எண்ணங்களை எளிதாக மாற்றி க்கொள்ள முடியாத நாட்டுப்பற்று மிக்க கடக ராசி அன்பர்களே!
கௌரவமும் அந்தஸ்தும் புகழும், அதிகரிக்கும் நேரம் இது. எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பண புழக்கம் தாராளமாக இருக்கும். சகோதர சகோதரிகளால் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் அதிகம். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை புதிய விஷயங்களில் ஈடுபட்டு பலன் அடைவீர்கள், புத்திர பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும், உத்யோக உயர்வும் கிடைக்கும். வெளிநாடுகள் செல்ல வாய்ப்புகள் அதிகம், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுய தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம். கூட்டாளிகளினால் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. முதலீடு செய்யும் முன் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்தல் அவசியம். இலாபம் சற்று குறைந்தே காணப்படும். மாணவர்கள் தன் எதிர்ப்பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆரம்பத்தில் தடுமாற்றமும் இறுதியில் நல்ல மதிப்பெண்களும் எடுக்க வாய்ப்பு உண்டு. கல்விக்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டு. அரசு ஆதரவு உண்டு. இருப்பினும் கணக்கு வழக்குகளில அதிக கவனம் தேவை. உஷ்ண தொல்லை உடலை வாட்டுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. அறுவை சிகிச்சை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் சரும பிரச்சனையில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ளுதல் அவசியம். யோகா பயிற்சி செய்வது சிறப்பு. ஓய்வின்றி எப்போதும் வேலை இருக்கும் காலம் இது. புதிய ஒப்பந்தங்களினால் வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் பண புழக்கம் தாராளமாகவே இருக்கும். புது புது பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இருப்பதால் அதை சீர்படுத்துதல் அவசியம். தெய்வீக நாட்டம் தேவை. நண்பர்களிடம் எதிர் பார்த்த அன்பும், ஆதரவும் கிட்டும். வீடு, இடம் அமைய வாய்ப்புகள் உண்டு.
பரிகாரங்கள்:
1.சனி பகவான் கோவிலுக்கு தங்களுக்கு உகந்த நாளில் சென்று வழிபட்டு வருவது சிறப்பு.
2.சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வருவது சிறப்பு.
3.ஹனுமன் சாலிசா மற்றும் ஸ்ரீ்விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்தல்.
4.முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, கர்மாக்களை முறையுடன் செய்து வருதல் வேண்டும்.
கவனத்திற்கு:
கோச்சாரம் ஒன்றை மட்டுமே வைத்து பலன் கூறக்கூடாது. ஒருவருடைய ஜாதகத்தில் சனிபகவான் இருக்கும் நிலை, நட்பு நிலையா, பகை நிலையா, சம நிலையா என்று ஆராய்தல் வேண்டும். சனிபகவான் நிற்கும் நட்சத்திரம் மற்றும் ராசியை கணித்தல் அவசியம். தற்போதைய ஒருவரது வயது, தசா புத்தி, அந்திரம் முடிந்தால் சித்திரமும் வக்ரநிலையையும் ஆராய்தல் வேண்டும். இந்த காலத்தில் குருபகவான் மற்றும் ராகு கேது நிலையை ஆராய்தல் வேண்டும். இதன்பிறகே உண்மையான முழுமையான பலனை தெரிந்துக்கொள்ள முடியும்.
சிம்மம்

மகம் - 1 , 2 , 3 , 4 பாதங்கள்
பூரம் - 1, 2 , 3 , 4 பாதங்கள்
உத்திரம் - 1 ஆம் பாதம்
உங்கள் ராசிநாதன் சூரியன். நம்பினோரை கைவிடார் என்ற குணத்தை கொண்டவர், நடை,உடை,பாவனை அனைத்திலும் தலைமை பொருந்தி இருக்கும், வார்த்தை சாதுர்யம் மிக்கவர், மற்றவர்களின் மனதில் இடம் பிடிக்கக்கூடியவர், நிர்வாகத்திற்கு சிறந்தவர், துணிவு மிக்கவர் எதற்கும் அஞ்சாதவர், அன்புக்காக ஏங்குபவர், எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் சிம்ம ராசி அன்பர்களே!
உங்களது ராசிக்கு 5 - ஆம் வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்ய போகிறார். இதுவரை அர்த்தாஷ்டம சனியினால் நீங்கள் அவதிப்பட்டதெல்லாம் நல்ல முடிவுக்கு வர போகிறது, உடல் ஆரோக்கியம் சீராகும். உடல் சோர்வு நீங்கும் மாணவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். சில சமயங்களில் மறதியும் கவனக்குறைவால் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராமல் இருக்கலாம். புதிய விஷயங்களை ஆர்வமுடன் கற்பீர்கள். வீடு, நிலம் வாங்க வாய்ப்புகள் உண்டு, பெற்றோர்களின் வழி சொத்துக்கள் வர வாய்ப்பு உண்டு. குழந்தைகளுடன் எச்சரிக்கை வேண்டும், அவர்களால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு எனினும் சிந்தித்து செயல்பட்டு தீர்க்கவும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். பூஜை புனஸ்காரங்களினால் மனம் அமைதி பெரும் அதனால் கோயில் குலத்தின் மீது நாட்டம் அதிகரிக்கும். வேலை கிடைப்பதில் தடை ஏற்படலாம். வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை நண்பர்களால் தேவையற்ற பிரச்சனைகள் வரலாம் எதையும் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் செய்தால் மட்டுமே காரிய வெற்றி கிடைக்கும். வீணாக பணத்தை செலவிடுதல் கூடாது. விரயம் ஆகும் நேரம் இது சுய தொழிலில் முதலீடு செய்யும் போது இரட்டிப்பு கவனம் தேவை. அரசாங்க விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை கணவன் மனைவி உறவு உற்சாகமாக இருக்கும். திருமணங்கள் தள்ளி போக வாய்ப்பு உண்டு.
கூட்டுக்குடும்பத்தில் உள்ளவர்கள் தனிக்குடித்தனம் செல்லும் நிலை ஏற்படும். பணியில் இருப்பவர்களுக்கு தான் செய்யாத குற்றத்திற்காக பொறுப்பு ஏற்கும் நிலை உருவாகும். மனைவியின் உடல் நலம் பாதிக்கப்படும் நண்பர்களால் பண செலவு ஏற்படும்.
பரிகாரங்கள்:
1.சனி பகவான் கோவிலுக்கு தங்களுக்கு உகந்த நாளில் சென்று வழிபட்டு வருவது சிறப்பு.
2.ஹனுமன் சாலிசா மற்றும் ஸ்ரீ்விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்தல்.
3.இரும்பு சக்தி அதிகமாக உள்ள உணவு பொருட்களை உட்கொள்ளுதல்.
4.முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, கர்மாக்களை முறையுடன் செய்து வருதல் வேண்டும்.
5.காக்கைக்கு உணவு அளித்தல்.
6.தான தருமம் செய்தல்.
கவனத்திற்கு:
கோச்சாரம் ஒன்றை மட்டுமே வைத்து பலன் கூறக்கூடாது. ஒருவருடைய ஜாதகத்தில் சனிபகவான் இருக்கும் நிலை, நட்பு நிலையா, பகை நிலையா, சம நிலையா என்று ஆராய்தல் வேண்டும். சனிபகவான் நிற்கும் நட்சத்திரம் மற்றும் ராசியை கணித்தல் அவசியம். தற்போதைய ஒருவரது வயது, தசா புத்தி, அந்திரம் முடிந்தால் சித்திரமும் வக்ரநிலையையும் ஆராய்தல் வேண்டும். இந்த காலத்தில் குருபகவான் மற்றும் ராகு கேது நிலையை ஆராய்தல் வேண்டும். இதன்பிறகே உண்மையான முழுமையான பலனை தெரிந்துக்கொள்ள முடியும்.
கன்னி

உத்திரம் - 2 , 3 , 4 பாதங்கள்.
அஸ்தம் - 1 , 2 , 3 , 4 பாதங்கள்.
சித்திரை - 1 , 2 பாதங்கள்.
உங்களது ராசிநாதன் புதன். கன்னி என்றால் அழகு. அழகாக அழகரித்து கொள்ளும் எண்ணம் மேலோங்கும். தன் அழகை தானே ரசித்து கொள்ளும் குணம் உடையவர். தனித்து திகழ விரும்புபவர். சிக்கனத்தை கையாளுபவர். கற்பனை திறன் அதிகம் கொண்டவர். புத்திக்கூர்மை நிறைந்தவர். கலைகளில் ஆர்வம் கொண்டவர். ஆன்மீகத்தில் நாட்டம் உடையவர். மனமார மற்றவர்களை பாராட்டும் குணம் உடைய கன்னி ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு சனி பகவான் 4- ஆம் வீட்டில் சஞ்சரிக்க போகிறார். இதை அர்த்தாஷ்டம சனி என்பர். எதிலும் கவனம் தேவை. அவசரப்பட்டு இருக்கும் வேலையை விடுவது நல்லது அல்ல. வேலை இல்லாதவர்களுக்கு வேலை அமையும். ஆனால் அது திருப்திகரமாக இருக்காது. ஆனால் ஒரே இடத்தில் நிலையாக இருக்கும் வாய்ப்பு அமையும். உயர்வு ஏற்படும், உயர்வினால் வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, பணவரவு திருப்திகரமாக இருக்கும். சேமிப்புகள் பெருகும். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும் அலைச்சல்கள் குறையும். புதிய முயற்சிகள் எடுக்கும் போது கவனம் தேவை. எதுவும் தாமதமாகவே நடைபெறும், நிலம், வீடு அமைய வாய்ப்பு உண்டு. ஆரோக்கியம் சீராக இருக்க வேண்டுதல் அவசியம். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கடன் அதிகரிக்கும் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். உணவில் கவனம் தேவை, கணவன் மனைவி விட்டுக்கொடுத்தல் அவசியம்.
நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழிலில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை. அரசு வேலை கிடைக்க வாய்ப்புகள் உண்டு. வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டு. கடுமையாக உழைத்தால் மட்டுமே மதிப்பெண்கள் வரும் மந்தமான நிலை ஏற்படும் வாய்ப்பு இருப்பதினால் சுறுசுறுப்பாக இருத்தல் அவசியம்.
பரிகாரங்கள்:
1. சனிபகவானின் தியான மந்திரம், மூலமந்திரம் மற்றும் காயத்திரி மந்திரங்களை உச்சரித்தல்.
2. காக்கைக்கு உணவு அளித்தல்.
3. உடல் ஊனமுற்றோருக்கு உதவுதல்.
4. ஹனுமன் சாலிசா மற்றும் ஸ்ரீ்விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்தல்.
5. சனி பகவான் கோவிலுக்கு தங்களுக்கு உகந்த நாளில் சென்று வழிபட்டு வருவது சிறப்பு.
6. சிவபெருமானை வழிபடுதல், தான தருமம் செய்தல்.
7.முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, கர்மாக்களை முறையுடன் செய்து வருதல் வேண்டும்.
8.யோகாசனம் மற்றும் முத்ராக்களை செய்தல்.
9. இரும்பு சக்தி அதிகமாக உள்ள உணவு பொருட்களை உட்கொள்ளுதல்.
10. தரமான தேவையான அளவில் நீலரத்தினம் முறைப்படி சுத்திகரிக்கப்பட்டு உகந்த உலோகத்தில் உகந்த நாள், நட்சத்திரம் பார்த்து அணிவது சிறப்பு.
11. “Take it easy policy” பின்பற்றவும்.
12. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வருவது சிறப்பு.
13.கல்விக்காக உதவுதல்.
கவனத்திற்கு:
கோச்சாரம் ஒன்றை மட்டுமே வைத்து பலன் கூறக்கூடாது. ஒருவருடைய ஜாதகத்தில் சனிபகவான் இருக்கும் நிலை, நட்பு நிலையா, பகை நிலையா, சம நிலையா என்று ஆராய்தல் வேண்டும். சனிபகவான் நிற்கும் நட்சத்திரம் மற்றும் ராசியை கணித்தல் அவசியம். தற்போதைய ஒருவரது வயது, தசா புத்தி, அந்திரம் முடிந்தால் சித்திரமும் வக்ரநிலையையும் ஆராய்தல் வேண்டும். இந்த காலத்தில் குருபகவான் மற்றும் ராகு கேது நிலையை ஆராய்தல் வேண்டும். இதன்பிறகே உண்மையான முழுமையான பலனை தெரிந்துக்கொள்ள முடியும்.
துலாம்

சித்திரை - 3 ,4 பாதங்கள்
ஸ்வாதி - 1 , 2 , 3 ,4 பாதங்கள்
விசாகம் - 1 , 2 , 3 பாதங்கள்
உங்களது ராசிநாதன் சுக்கிரன். வசீகர சக்தி கொண்டவர். நகைச்சுவை என்பது இவர்களது வரப்பிரசாதம். பணத்தின் மீது அதிக நாட்டம் கொண்டவர். எதை செய்தாலும் தன் நன்மையை யோசிப்பவர். சேமிப்பு குணம் நிறைந்தவர். தன் திறமையை வெளிக்கொணர்ந்து வரும் புகழினால் சந்தோஷப்படுபவர். இரக்க சுபாவம் நிறைந்தவர். தவறுகளை தட்டி கேட்கும் குணம் உடையவர். சிரித்தே பேசி காரியத்தை சாதிக்கும் துலா ராசி நேயர்களே!
உங்கள் ராசிக்கு 3 -ஆம் இடத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். 71/2 ஆண்டுகளாக 71/2 சனியின் பாதிப்பால் இதுவரை பட்ட துயரங்கள் எல்லாம் விடுபட போகும் காலம் இது. சுப காரியம் நடைபெறும் காலம் இது. உடன் பிறந்தவர்கள் உற்றார், உறவினர்கள், பெற்றோர்களினால் நன்மைகள் உண்டாகும். புது உறவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும், புதிய சொத்துக்கள் வாங்கி மகிழும் நேரம் இது. கல்வியில் கவனம் தேவை. மற்றவர்கள் தங்களை பற்றி விமர்சனம் செய்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் இருத்தல் அவசியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழில் சிறப்பாகவும் இலாபமாகவும் இருக்கும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டு. சேமித்த பணத்தில் கவனம் தேவை ஒரு முறைக்கு பல முறை யோசித்து கடன் வாங்கவோ, கொடுக்கவோ செய்தல் அவசியம். தந்தையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி இடத்தில் சந்தோஷமான உறவு இருக்கும். வேலைப்பளுவினால் உற்சாகங்கள் குறையலாம். மன சஞ்சலங்கள் ஏற்படலாம். அரசு வழியில் சாதகம் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பரிகாரங்கள்:
1.சனி பகவான் கோவிலுக்கு தங்களுக்கு உகந்த நாளில் சென்று வழிபட்டு வருவது சிறப்பு.
2.முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, கர்மாக்களை முறையுடன் செய்து வருதல் வேண்டும்.
கவனத்திற்கு:
கோச்சாரம் ஒன்றை மட்டுமே வைத்து பலன் கூறக்கூடாது. ஒருவருடைய ஜாதகத்தில் சனிபகவான் இருக்கும் நிலை, நட்பு நிலையா, பகை நிலையா, சம நிலையா என்று ஆராய்தல் வேண்டும். சனிபகவான் நிற்கும் நட்சத்திரம் மற்றும் ராசியை கணித்தல் அவசியம். தற்போதைய ஒருவரது வயது, தசா புத்தி, அந்திரம் முடிந்தால் சித்திரமும் வக்ரநிலையையும் ஆராய்தல் வேண்டும். இந்த காலத்தி்ல் குருபகவான் மற்றும் ராகு கேது நிலையை ஆராய்தல் வேண்டும். இதன்பிறகே உண்மையான முழுமையான பலனை தெரிந்துக்கொள்ள முடியும்.
விருச்சிகம்

விசாகம் - 4 ஆம் பாதம்
அனுஷம் - 1 , 2 , 3 ,4 பாதங்கள்
கேட்டை - 1 , 2 , 3 ,4 பாதங்கள்
உங்களது ராசிநாதன் செவ்வாய். சகஜனத்தோடு என்றும் இருக்க விரும்புபவர். எங்கு சென்றாலும் ஒரு கூட்டத்தை தன்னோடு சேர்த்துக்கொள்பவர். பெரிய ஆசைகளை கொண்டவர். இயந்திர ஈடுபாடுகள் அதிகம் நிறைந்தவர். மனோவலிமையையும் புதிதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைந்தவர். ஆன்மீக நாட்டம் கொண்டவர். தன்னுடைய புத்தியினாலும் விடாமுயற்சியினாலும் எதையும் எதிர் கொள்ளும் தைரியத்தினாலும் நுட்பமாக செயல்பட்டு பல காரியங்களை சாதிக்கும் குணமுடைய விருச்சிக ராசி அன்பர்களே!
இதுவரை ஜென்ம சனியாக சஞ்சரித்து வந்த சனிபகவான் இனி பாத சனியாக சஞ்சரிக்க போகிறார். ஜென்ம சனியை காட்டிலும் சற்றே பரவாயில்லை என்று எடுத்துக்கொள்ளும் காலம். தள்ளி போன சுபகாரியங்கள் நடைபெறும். மந்த நிலை மாறி சுறுசுறுப்பாக செயல்பட உதவும். மனமும், உடலும், முன்பை விட ஆரோக்கியமாக இருக்கும். கவலைகள் வந்த போதும். அதை சமாளிக்கும் திறமை கிடைக்கும். எதையும் நிதானமாக ஏற்றுக்கொள்ளும் மனோபலம் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு, இடம் வாங்கும் எண்ணம் மேலோங்கும் யாருடன் மனக்கசப்பு வரக்கூடாது. தனக்கு தேவையில்லாத விஷங்களை தவிர்த்தல் நல்லது. கூட்டுப்பிரச்சனைகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடத்தில் மிகவும் அனுசரித்து பழகவும். அரசாங்க விஷயத்தில் அதிகப்படியான கவனம் தேவை. சுய தொழிலில் இலாபம் உண்டு பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். கடன் வாங்கும் போது பல முறை யோசித்து பின் தான் வாங்க வேண்டும். எதையும் பொறுமையாக செய்தால் வெற்றி கிடைக்கும். உழைப்புக்கேற்ற வருமானம் வராது என்றாலும் அந்த உழைப்பு ஒரு வழிகாட்டியாக இருக்கும். மனதை உற்சாகமாக வைத்து கொண்டு மாணவர்கள் படித்தல் அவசியம், மறதியால் அவதிப்பட வாய்ப்பு உண்டு என்பதினால் அதற்கான யோகா போன்ற வழிமுறைகளை பின்பற்றுதல் அவசியம். படிப்பில் கவனம் தேவை. உணவில் கவனம் தேவை. உடலை சுத்தமாக வைத்திருத்தல் அவசியம்.
ஆன்மீக உணர்வு அதிகமாகும் கொடுத்த பணம் திரும்பி பெற பல முறை முயற்சிக்க வேண்டியது இருக்கும். விபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு கர்ப்பப்பையில் கோளாறு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அனாவசிய செலவுகளை குறைத்துக்கொண்டு வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
பரிகாரங்கள்:
1. சனிபகவானின் தியான மந்திரம், மூலமந்திரம் மற்றும் காயத்திரி மந்திரங்களை உச்சரித்தல்.
2. காக்கைக்கு உணவு அளித்தல்.
3. உடல் ஊனமுற்றோருக்கு உதவுதல்.
4. ஹனுமன் சாலிசா மற்றும் ஸ்ரீ்விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்தல்.
5. சனி பகவான் கோவிலுக்கு தங்களுக்கு உகந்த நாளில் சென்று வழிபட்டு வருவது சிறப்பு.
6. சிவபெருமானை வழிபடுதல், தான தருமம் செய்தல்.
7.முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, கர்மாக்களை முறையுடன் செய்து வருதல் வேண்டும்.
8.யோகாசனம் மற்றும் முத்ராக்களை செய்தல்.
9. இரும்பு சக்தி அதிகமாக உள்ள உணவு பொருட்களை உட்கொள்ளுதல்.
10. தரமான தேவையான அளவில் நீலரத்தினம் முறைப்படி சுத்திகரிக்கப்பட்டு உகந்த உலோகத்தில் உகந்த நாள், நட்சத்திரம் பார்த்து அணிவது சிறப்பு.
11. “Take it easy policy” பின்பற்றவும்.
12. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வருவது சிறப்பு.
13.கல்விக்காக உதவுதல்.
கவனத்திற்கு:
கோச்சாரம் ஒன்றை மட்டுமே வைத்து பலன் கூறக்கூடாது. ஒருவருடைய ஜாதகத்தில் சனிபகவான் இருக்கும் நிலை, நட்பு நிலையா, பகை நிலையா, சம நிலையா என்று ஆராய்தல் வேண்டும். சனிபகவான் நிற்கும் நட்சத்திரம் மற்றும் ராசியை கணித்தல் அவசியம். தற்போதைய ஒருவரது வயது, தசா புத்தி, அந்திரம் முடிந்தால் சித்திரமும் வக்ரநிலையையும் ஆராய்தல் வேண்டும். இந்த காலத்தில் குருபகவான் மற்றும் ராகு கேது நிலையை ஆராய்தல் வேண்டும். இதன்பிறகே உண்மையான முழுமையான பலனை தெரிந்துக்கொள்ள முடியும்.
தனுசு

மூலம் - 1 , 2 , 3 ,4 பாதங்கள்
பூராடம் - 1 , 2 , 3 ,4 பாதங்கள்
உத்திராடம் - 1 ஆம் பாதங்கள்
உங்களது ராசிநாதன் குரு. பக்குவமானவர். தெய்வீக நாட்டம் கொண்டவர். விரதங்கள் இருப்பதில் பெரிய நாட்டம் கொண்டவர். தாராளமான குணம் உடையவர். யதார்த்தவாதி. பொதுநல குணம் நிறைந்தவர். எதையும் எளிதாக நம்புபவர். மனம் சாந்திக்காக பல முறைகளை கையாளுபவர். தலைமைப்பதவிக்கு தகுதியானவர். மனதார அனைவரையும் ஆசிர்வதிக்கும் குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
இதுவரை 12 - ஆம் இடத்தில் விரைய சனியாக சஞ்சரித்து வந்த சனிபகவான் இப்போது ஜென்ம சனியாக உங்கள் ராசியில் சஞ்சரிக்க போகிறார். இது நன்மையையும், தீமையும் கலந்த பல சீரமைப்புகளை கொடுக்கக்கூடிய காலமாகவே இருக்கப்போகிறது. இனி வாழும் காலம் அனைத்தும் சிறப்பாக இருக்க வழிகாட்டுபவராக தங்களுக்கு திகழப்போகிறார். தங்களை பக்குவப்படுத்த தயாராகி விட்டார் என்றே கொள்ள வேண்டும். மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய காலம் இது. கால் வைக்கும் ஒவ்வொரு படியிலும் நிதானம் தேவை. விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம். போராட்டமான காலம் என்றாலும் இறுதியில் எவ்வாறு அப்போராட்டத்தை வெல்வது என்பது தெரியப்படுத்துவார். விரைய சனியினால் ஏற்பட்ட விரையங்களை சமாளிக்க கற்றுக்கொடுப்பார். தேவையற்ற வீண் பேச்சுக்களை தவிர்த்தல் அவசியம். அலைச்சல்கள் அதிகரிக்கும். மனக்குழப்பங்கள் அதிகம் வந்தாலும் அக்குழப்பதில் இருந்து எவ்வாறு விடுபட முடியும் என்பதையும் கற்பிப்பார். யோசித்துப்பேசும் பக்குவத்தை ஏற்படுத்துவார். சொத்துக்கள் வாங்கும் போது இரட்டிப்பு கவனம் தேவை. எதிலும் தடை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தாயின் உடல் நலத்தில் அக்கறை தேவை. மருத்துவ செலவு வர வாய்ப்பு உண்டு. கல்வியில் கவனம் தேவை. நன்கு யோசித்து சான்றோருடன் ஆசி பெற்று நல்வழி காட்டுபவர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகே எந்த காரியத்தையும் செய்தல் வேண்டும். உடல் உழைப்பு அதிகரிக்கும் வருமானம் வரும் என்றாலும் அது தேவையான நேரங்களில் வருவது கடினம். புத்திர பாக்கியம் கிடைக்கும். அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. வேலை செய்யும் இடத்தில் அனைவரையும் அனுசரித்து செல்லுதல் அவசியம். வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டு. சுயத்தொழில் அல்லது கூட்டுத்தொழில் செய்வதற்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். அதிக முதலீடுகளை தவிர்ப்பது நல்லது அரசாங்க விஷயத்தில் நன்மைகள் ஏற்படும் அரசியல் சம்மந்தமான எதிரிகள் ஏற்படலாம். படிப்பில் மிகவும் கவனம் தேவை. ஞாபகசக்தியை அதிகரித்துக்கொள்ளும் பயிற்சிகள் தேவை. படிப்பில் மட்டுமே நாட்டம் செலுத்த வேண்டும். அசாத்திய தைரியம் கூடாது. வீடு, இடம் வாங்கும் பொழுது கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. திருமண சுப காரியங்கள் நடக்கும். நண்பர்களினால் ஆதாயம் உண்டு.
பரிகாரங்கள்:
1. சனிபகவானின் தியான மந்திரம், மூலமந்திரம் மற்றும் காயத்திரி மந்திரங்களை உச்சரித்தல்.
2. காக்கைக்கு உணவு அளித்தல்.
3. உடல் ஊனமுற்றோருக்கு உதவுதல்.
4. ஹனுமன் சாலிசா மற்றும் ஸ்ரீ்விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்தல்.
5. சனி பகவான் கோவிலுக்கு தங்களுக்கு உகந்த நாளில் சென்று வழிபட்டு வருவது சிறப்பு.
6. சிவபெருமானை வழிபடுதல், தான தருமம் செய்தல்.
7.முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, கர்மாக்களை முறையுடன் செய்து வருதல் வேண்டும்.
8.யோகாசனம் மற்றும் முத்ராக்களை செய்தல்.
9. இரும்பு சக்தி அதிகமாக உள்ள உணவு பொருட்களை உட்கொள்ளுதல்.
10. தரமான தேவையான அளவில் நீலரத்தினம் முறைப்படி சுத்திகரிக்கப்பட்டு உகந்த உலோகத்தில் உகந்த நாள், நட்சத்திரம் பார்த்து அணிவது சிறப்பு.
11. “Take it easy policy” பின்பற்றவும்.
12. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வருவது சிறப்பு.
13.கல்விக்காக உதவுதல்.
கவனத்திற்கு:
கோச்சாரம் ஒன்றை மட்டுமே வைத்து பலன் கூறக்கூடாது. ஒருவருடைய ஜாதகத்தில் சனிபகவான் இருக்கும் நிலை, நட்பு நிலையா, பகை நிலையா, சம நிலையா என்று ஆராய்தல் வேண்டும். சனிபகவான் நிற்கும் நட்சத்திரம் மற்றும் ராசியை கணித்தல் அவசியம். தற்போதைய ஒருவரது வயது, தசா புத்தி, அந்திரம் முடிந்தால் சித்திரமும் வக்ரநிலையையும் ஆராய்தல் வேண்டும். இந்த காலத்தில் குருபகவான் மற்றும் ராகு கேது நிலையை ஆராய்தல் வேண்டும். இதன்பிறகே உண்மையான முழுமையான பலனை தெரிந்துக்கொள்ள முடியும்.
மகரம்

உத்திராடம் - 2 , 3 ,4 பாதங்கள்
திருவோணம் - 1 , 2 , 3 ,4 பாதங்கள்
அவிட்டம் - 1 , 2 பாதங்கள்
உங்கள் ராசிநாதன் சனி பகவான் சுறுசுறுப்பானவர், போற்றுதல் எனும் தங்களின் குணத்தினால் மற்றவர்களிடம் காரியத்தை சாதித்து கொள்வீர்கள், உள் ஒரு தோற்றமும், புறம் ஒரு தோற்றமும் இருப்பது கைவந்த கலை, அனுபவத்தின் மேல் நம்பிக்கை கொண்டிருப்பவர், தெரியாது என்ற சொல்லை சொல்ல தெரியாதவர், விருந்தோம்பல் என்ற அற்புதமான குணத்தை கொண்டிருக்கும் மகர ராசி அன்பர்களே!
71/2 சனியாக சனிபகவான் உங்கள் ராசியில் சஞ்சரிக்க வருகிறார். பல மாற்றங்களை சந்திக்க போகும் காலம் இது. சனிபகவான் தங்கள் ராசிநாதன் என்பதால் அதிகப்படியான கவலை தேவையில்லை. அவர் தங்களோடு இனி வரும் 71/2 ஆண்டுகள் பயணிக்க போகிறார். வீடு மாற்றம் , தொழில் மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் போன்ற பல மாற்றங்களை சந்திக்கும் காலம் இது. அலைச்சல்கள் அதிகரிக்கும். இரும்பு சக்தி அதிகமாக உள்ள உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் உடல் சோர்வு இல்லாமல் இருக்கும். விழிப்புணர்வோடு இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். அனைவரையும் அனுசரித்து செல்லுதல் அவசியம். செலவு செய்யும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசித்தல் அவசியம். மனோபயம் அதிகரிக்க கூடிய காலம் என்பதால் யோகாசனங்களும், தியானங்களும், தெய்வ வழிபாடுகளும் மிகவும் தேவை. எதிலும் நிதானமாக செயல்படுதல் அவசியம். வண்டி, வாகனம் ஓட்டுவதில் கவனம் தேவை. கையிறுப்பு கரையலாம். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். வீடு, நிலம் வாங்க வாய்ப்பு உண்டு. பராமரிப்பு பணியினால் செலவுகள் அதிகரிக்கலாம். எதிரிகளை வாழ்த்துதல் அவசியம். எதிரிகளால் பிரச்சனை வர வாய்ப்பு உண்டு. சொத்துகளினால் தடைகளும் சிக்கல்களும் வந்து சேரலாம். வீண் வதந்திகளால் மனம் வருந்தக்கூடாது. உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் இருக்கலாம். கவலைக்கு இடம் கொடுக்காமல் குதுகலமாக இருக்கப்பழகிக்கொள்ளுதல் வேண்டும். எதையும் சமாளிக்கும் திறனை இதன் மூலம் சனிபகவான் கற்றுக்கொடுப்பார். நண்பர்களினால் நட்பும் போராட்டமாக இருக்கும். சுய தொழிலில் இலாபம் வந்தாலும் பற்றாக்குறையாகவே இருக்கும். உணவில் கவனம் தேவை. நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். நேற்றைய உணவையும், தரமற்ற உணவையும் தவிர்த்தல் அவசியம். தீய பழக்கங்களுக்கு மனம் நாடும். முக்கிய பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது சிறப்பு. நம்பியவர்களின் மீது சந்தேகத்தை வரவழைக்கும். நிம்மதியின்மையால் தூக்கத்தை தொலைக்க வைக்கும். தொடர் தடைகள் வரலாம்.
அரசு உதவி கிடைக்க தடைகள் வரலாம். அரசு விஷயத்தில் கவனம் தேவை. படிப்பில் அதிக நாட்டம் செலுத்துதல் வேண்டும். ஞாபகசக்தியை பெருக்கி கொள்ளும் பயிற்சிகள் அவசியம். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுதல் மிக மிக அவசியம். உடலில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே கவனித்துக்கொள்ளுதல் அவசியம். குடும்பத்தாரை அனுசரித்து செல்லுதல் அவசியம். விட்டு கொடுக்கும் தன்மையை தனக்குள் ஏற்படுத்திக்கொள்ள கற்றுக்கொடுக்கும் காலம் இது. திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. பல முறை முயற்சித்தால் மட்டுமே எக்காரியமும் நிறைவேறும்.
பரிகாரங்கள்:
1. சனிபகவானின் தியான மந்திரம், மூலமந்திரம் மற்றும் காயத்திரி மந்திரங்களை உச்சரித்தல்.
2. காக்கைக்கு உணவு அளித்தல்.
3. உடல் ஊனமுற்றோருக்கு உதவுதல்.
4. ஹனுமன் சாலிசா மற்றும் ஸ்ரீ்விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்தல்.
5. சனி பகவான் கோவிலுக்கு தங்களுக்கு உகந்த நாளில் சென்று வழிபட்டு வருவது சிறப்பு.
6. சிவபெருமானை வழிபடுதல், தான தருமம் செய்தல்.
7.முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, கர்மாக்களை முறையுடன் செய்து வருதல் வேண்டும்.
8.யோகாசனம் மற்றும் முத்ராக்களை செய்தல்.
9. இரும்பு சக்தி அதிகமாக உள்ள உணவு பொருட்களை உட்கொள்ளுதல்.
10. தரமான தேவையான அளவில் நீலரத்தினம் முறைப்படி சுத்திகரிக்கப்பட்டு உகந்த உலோகத்தில் உகந்த நாள், நட்சத்திரம் பார்த்து அணிவது சிறப்பு.
11. “Take it easy policy” பின்பற்றவும்.
12. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வருவது சிறப்பு.
13.கல்விக்காக உதவுதல்.
கவனத்திற்கு:
கோச்சாரம் ஒன்றை மட்டுமே வைத்து பலன் கூறக்கூடாது. ஒருவருடைய ஜாதகத்தில் சனிபகவான் இருக்கும் நிலை, நட்பு நிலையா, பகை நிலையா, சம நிலையா என்று ஆராய்தல் வேண்டும். சனிபகவான் நிற்கும் நட்சத்திரம் மற்றும் ராசியை கணித்தல் அவசியம். தற்போதைய ஒருவரது வயது, தசா புத்தி, அந்திரம் முடிந்தால் சித்திரமும் வக்ரநிலையையும் ஆராய்தல் வேண்டும். இந்த காலத்தில் குருபகவான் மற்றும் ராகு கேது நிலையை ஆராய்தல் வேண்டும். இதன்பிறகே உண்மையான முழுமையான பலனை தெரிந்துக்கொள்ள முடியும்
கும்பம்

அவிட்டம் - 3 ,4 பாதங்கள்
சதயம் - 1 ,2 ,3 ,4 பாதங்கள்
பூரட்டாதி - 1 ,2 ,3 பாதங்கள்
உங்கள் ராசிநாதன் சனிபகவான். ஒரு விஷயத்தை ஆராய்ந்து செய்வதில் தங்களுக்கு நிகர் யாரும் இல்லை. ஒரு வார்த்தை சொன்னாலும் அதில் பல கருத்துக்கள் இருக்கும். தாராளமான மனம் கொண்டவர். பக்குவமானவர். தன்னை நம்பினோர்க்கு ஆராய்ந்து நல்வழி காட்டக்கூடியவர். கொடுத்த வாக்கை காப்பாற்றும் குணம் நிறைந்தவர். உழைத்து சாதிக்கும் எண்ணம் கொண்டவர். புத்திக்கூர்மை நிறைந்தவர். ஞாபகசக்தி அதிகமாக கொண்ட கும்பம் ராசி அன்பர்களே!
இதுவரை 10-ஆம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இலாப ஸ்தானமாகிய 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய போகிறார். பொன்னான காலம் என்றே கூற வேண்டும். பணப்புழக்கம் அதிகரிக்கும் காலம் இது. சகோதர சகோதரிகளால் நன்மை உண்டாகும். வீடு, இடம் வாங்க சிறந்த வாய்ப்பு கிடைக்கும். வேலையில் பளு அதிகரிக்க வாய்ப்பு உண்டு இருப்பினும் பொறுமையாக அதை சமாளிக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்ப்பு சக்தியை பெருக்கும் முயற்சியை எடுத்தல் அவசியம். பயமின்றி வாழ்வீர்கள். திருமணம் கைக்கூட வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உண்டு. கோவில், குளம் மற்றும் தெய்வீக சிந்தனை இருக்கும் வேலை ஆட்களினால் ஒத்துழைப்பு கிடைக்கும்.
போட்டி பொறாமைகளை சமாளிக்கும் திறன் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கு தடைகள் ஏற்படலாம். சுய தொழில் இலாபகரமாகவே இருக்கும். சட்ட சிக்கலில அதிக கவனம் தேவை. அரசினால் அனுகூலம் உண்டு. மாணவர்கள் அதிகம் போராட வேண்டி இருக்கும். வண்டி, வாகனம் ஓட்டுவதில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது. உணவில் கவனம் தேவை. உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். நேற்றைய உணவையும், தரமற்ற உணவையும் தவிர்த்தல் அவசியம். கணவன் மனைவி உறவு சுமூகமாக இருக்கும். நண்பர்களால் ஆதரவு கிடைக்கும்.
சேமிப்பில் கவனம் தேவை, குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக செலவுகள் ஏற்படலாம், ஓய்வின்றி உழைப்பதால் உடல் நலத்தில் கோளாறுகள் வர வாய்ப்பு உள்ளது, பெண்களுக்கு மென்சஸ், கர்ப்பப்பையில் சிறுசிறு கோளாறுகள் வர வாய்ப்புகள் உள்ளது, ஆனால் எதிலும் பெரிய பாதிப்பை தராது.
பரிகாரங்கள்:
1.சனிபகவான் கோவிலுக்கு தங்களுக்கு உகந்த நாளில் சென்று வழிபடுவது சிறப்பு.
2.சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வருவது சிறப்பு.
3.ஹனுமன் சாலிசா மற்றும் விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்தல்.
4.முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, கர்மாக்களை முறையுடன் செய்து வருதல் வேண்டும்.
கவனத்திற்கு:
கோச்சாரம் ஒன்றை மட்டுமே வைத்து பலன் கூறக்கூடாது. ஒருவருடைய ஜாதகத்தில் சனிபகவான் இருக்கும் நிலை, நட்பு நிலையா, பகை நிலையா, சம நிலையா என்று ஆராய்தல் வேண்டும். சனிபகவான் நிற்கும் நட்சத்திரம் மற்றும் ராசியை கணித்தல் அவசியம். தற்போதைய ஒருவரது வயது, தசா புத்தி, அந்திரம் முடிந்தால் சித்திரமும் வக்ரநிலையையும் ஆராய்தல் வேண்டும். இந்த காலத்தில் குருபகவான் மற்றும் ராகு கேது நிலையை ஆராய்தல் வேண்டும். இதன்பிறகே உண்மையான முழுமையான பலனை தெரிந்துக்கொள்ள முடியும்.
மீனம்

பூரட்டாதி - 4 ஆம் பாதம்
உத்திரட்டாதி - 1 ,2 ,3 ,4 பாதங்கள்
ரேவதி - 1 ,2 ,3 ,4 பாதங்கள்
உங்கள் ராசிநாதன் குரு. குழந்தை போல குணமுடையவர். எதிலும் திருப்தி அடையாதவர். அடிக்கடி சிந்தனைகளை மாற்றி கொள்பவர். பாசமானவர். பாசத்திற்காக ஏங்குபவர். தன் பயம் கொண்டவர். பொறுமையானவர். தன் கையில் எடுத்தக்காரியங்களை சிர்த்தையாக செய்பவர். எதையும் எளிதாக சமாளிக்கும் குணமுடையவர். எதையும் தேர்வு செய்யும் போது பலமுறை யோசிக்கும் மீன ராசி அன்பர்களே!
இதுவரை 9-ஆம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் ஜீவ ஸ்தானமாகிய 10-ஆம் இடத்தில் சஞ்சரிக்க போகிறார். மதிப்பு, மரியாதை, அந்தஸ்து, புகழ் அதிகரிக்கும் நேரம் இது. அரசு வழியில் அனுகூலம் கிடைக்கும். எந்த முயற்சியும் தள்ளி போடாமல் உடனே முடிக்க கற்றுக்கொடுக்கும் நிதானத்தை ஏற்படுத்தும். சேமிப்புகள் கரைய வாய்ப்பு உண்டு. அதனால் விரைய செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வண்டி, வாகனம் ஓட்டுவதில் எச்சரிக்கை தேவை. எதையும் யோசித்து செய்தல் அவசியம். சொத்துகளில் பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு. வீடு மற்றும் நிலம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். சகோதர சகோதரிகளுடன் பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு. சேமிப்புகளின் மீது கவனம் தேவை.
திடீர் செலவுகள் வர வாய்ப்பு உண்டு. அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையில்லா பயணங்கள் அதிகரிக்கும். திருமணம் மற்றும் சுப காரியங்கள் நடக்கும். நண்பர்களுடன் கவனம் தேவை. வீண் பேச்சுக்கள் கூடாது. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து இடும் போது இரட்டிப்பு கவனம் தேவை. சுய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டு. கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளினால் பிரச்சனை வராமல் இருக்க கவனம் தேவை. பொறுமையாக பேசுதல் அவசியம். விழிப்புணர்வுடன் என்றும் இருத்தல் வேண்டும். நெருக்கடியான நிலைமைகள் பல சந்திக்க நேரிடும். அவ்வாறான நேரங்களில் மனம் தெளிவாகவும் உடல் ஆரோக்கியமாகவும் இருக்க யோகா போன்ற பயிற்சிகள் தேவை. அனைவரிடமும் விட்டுக்கொடுத்து செல்லுதல் அவசியம். பல தடைகள் சந்திக்க நேரிடலாம். படிப்பில் மட்டும் கவனம் தேவை. மாணவர்கள் மனதை ஒருநிலைப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். எந்த வேலை செய்தாலும் கவனமுடன் செய்தல் அவசியம். உடன் இருப்பவர்களினால் போட்டி பொறாமை ஏற்படும் அதனை கையாளத்தெறிதல் அவசியம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் போது கவனம் தேவை. அரசாங்க விஷயத்தில் மிகவும் எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் சான்றோர்களையும் அனுபவசாலிகளையும் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுத்தல் அவசியம். கணவன் மனைவி விட்டு கொடுத்தல் அவசியம். சிரித்த முகத்தோடு இருக்கக்கற்றுக்கொள்ளுதல் அவசியம்.
பரிகாரங்கள்:
1. சனிபகவானின் தியான மந்திரம், மூலமந்திரம் மற்றும் காயத்திரி மந்திரங்களை உச்சரித்தல்.
2. காக்கைக்கு உணவு அளித்தல்.
3. உடல் ஊனமுற்றோருக்கு உதவுதல்.
4. ஹனுமன் சாலிசா மற்றும் ஸ்ரீ்விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்தல்.
5. சனி பகவான் கோவிலுக்கு தங்களுக்கு உகந்த நாளில் சென்று வழிபட்டு வருவது சிறப்பு.
6. சிவபெருமானை வழிபடுதல், தான தருமம் செய்தல்.
7.முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, கர்மாக்களை முறையுடன் செய்து வருதல் வேண்டும்.
8.யோகாசனம் மற்றும் முத்ராக்களை செய்தல்.
9. இரும்பு சக்தி அதிகமாக உள்ள உணவு பொருட்களை உட்கொள்ளுதல்.
10. தரமான தேவையான அளவில் நீலரத்தினம் முறைப்படி சுத்திகரிக்கப்பட்டு உகந்த உலோகத்தில் உகந்த நாள், நட்சத்திரம் பார்த்து அணிவது சிறப்பு.
11. “Take it easy policy” பின்பற்றவும்.
12. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வருவது சிறப்பு.
13.கல்விக்காக உதவுதல்.
கவனத்திற்கு:
கோச்சாரம் ஒன்றை மட்டுமே வைத்து பலன் கூறக்கூடாது. ஒருவருடைய ஜாதகத்தில் சனிபகவான் இருக்கும் நிலை, நட்பு நிலையா, பகை நிலையா, சம நிலையா என்று ஆராய்தல் வேண்டும். சனிபகவான் நிற்கும் நட்சத்திரம் மற்றும் ராசியை கணித்தல் அவசியம். தற்போதைய ஒருவரது வயது, தசா புத்தி, அந்திரம் முடிந்தால் சித்திரமும் வக்ரநிலையையும் ஆராய்தல் வேண்டும். இந்த காலத்தில் குருபகவான் மற்றும் ராகு கேது நிலையை ஆராய்தல் வேண்டும். இதன்பிறகே உண்மையான முழுமையான பலனை தெரிந்துக்கொள்ள முடியும்.
இந்த சனிப்பெயர்ச்சி பலன்களை கணித்து எழுதியவர்
Dr. திருமதி. கல்பனா ஸ்ரீகாந்த்
Chief Happiness Adviser
B.Com., P.G.D.C.P.,D.D., D.G.,P.G in Yoga, M.Acu.,
Astro-Gemmologist, Nameologist, Yoga, Mudra, Rudra, Crystal Consultant