வால்பாறை அருகே தும்பிக்கை இல்லாமல் சுற்றும் காட்டு யானை - வைரலாகும் வீடியோ!

வால்பாறை-சாலக்குடி ரோட்டில் தும்பிக்கை இல்லாமல் நடமாடும் குட்டி யானை குறித்து, கேரள வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள அதிரப்பள்ளி வனப்பகுதியில் தும்பிக்கை இல்லாமல் குட்டி யானை ஒன்று தாய் யானையின் அரவணைப்பில் சுற்றி வருகிறது.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி-வால்பாறை ரோட்டில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. இந்த வழித்தடத்தில், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், சுற்றுலா பயணியர் அதிக அளவில் செல்கின்றனர்.

இந்நிலையில், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகேயுள்ள எண்ணபனை எஸ்டேட் பகுதியில் இரண்டு நாட்களாக குட்டியுடன் கூடிய 5 காட்டு யானைகள் சுற்றித் திரிந்துள்ளது. இந்த வழித்தடத்தில், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், சுற்றுலா பயணியர் அதிக அளவில் செல்கின்றனர்.



இந்நிலையில், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே வனப்பகுதியில், ஒரு குட்டியுடன் ஐந்து யானைகள் முகாமிட்டுள்ளன.



இந்த கூட்டத்தில் தாய் யானையுடன் தும்பிக்கை இன்றி குட்டியானை ஒன்று, உலா வருவதை சிலேஸ் சந்திரதா என்பவர் படம் பிடித்து உள்ளார். தும்பிக்கை இல்லாத குட்டி யானையின் வீடியோ, சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து கேரள வனத்துறையினர் கூறுகையில், 'குட்டி யானைக்கு பிறவியிலேயே தும்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது பிற வனவிலங்குகள் தாக்கியதில் தும்பிக்கை இழந்திருக்கலாம். ஆனால், குட்டி யானை ஆரோக்கியத்துடன், தாய் யானையுடன் உலா வருகிறது. அந்த யானையின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறோம்' என்றனர்.

தும்பிக்கை இல்லாமல் சுற்றி வரும் யானையை பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...