கோவை வ.உ.சி மைதானத்தில் புகைப்படக் கண்காட்சி தொடக்கம்

அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து 'ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி' என்ற தலைப்பில் 'புகைப்படக் கண்காட்சி மற்றும் உணவு திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.


கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு ஓராண்டில் அரசின் அரும்பணிகள் அணிவகுப்பு குறித்து "ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி" என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சி மற்றும் உணவு திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணைமேயர் வெற்றிச்செல்வன் மாநகராட்சி கவுன்சிலர் மீனாலோகு, வரி விதிப்பு குழு தலைவர் முபஷீரா, மாமன்ற உறுப்பினர்கள் சுமா, முனியம்மாள், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் செல்வம், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மரு.தமிழ்செல்வன், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.



இப்புகைப்படக் கண்காட்சியில், தமிழ்நாடு முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், அரசின் சிறப்புத் திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம், இன்னூர் காப்போம் திட்டம், காலை உணவுத் திட்டம், எண்ணும் எழுத்து, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், கல்லூரி கனவு, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண், நம்ம ஊரு சூப்பரு, மீண்டும் மஞ்சப்பை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, கோவை மாவட்டத்தில் அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.



மேலும், மகளிர்த் திட்டம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களைக் கொண்டு தெருவோர உணவகம் போன்ற அமைப்பில், சிறுதானியம் மற்றும் பல்சுவை உணவுடன் கூடிய அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்புகைப்படக் கண்காட்சி இன்று முதல் 22ஆம் தேதி வரை (10 நாட்கள்) தினசரி மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெறவுள்ளது. இப்புகைப்படக் கண்காட்சி நடைபெறும் நாட்களில் தினந்தோறும், பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர் கல்வித்துறையின் சார்பில், மாணவ, மாணவியர்களைக் கொண்டு கலைநிகழ்ச்சிகளும், கலைப்பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் ஒயிலாட்டம், தப்பாட்டம் மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.



மேலும், தொடக்க நாளான இன்று, அன்னூர் தவில் வித்வான், சிங்கப்பூர் மலேசியா புகழ் குமரேசன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக்கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...