நீலகிரியில் களைகட்டிய காணும் பொங்கல் கொண்டாட்டம் - ஊட்டியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்..!

காணும் பொங்கலையொட்டி உதகைக்கு குடும்பம் குடும்பமாக படையெடுத்துள்ள சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.



நீலகிரி: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் பொங்கல் விடுமுறை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை என்பது வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.



இந்த நிலையில் காணும் பொங்கல் தினமான இன்றும் சுற்றுலா பயணிகள் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை காண குவிந்து வருகின்றனர்.



குறிப்பாக குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்காவில் சென்று கண்ணாடி மாளிகையை கண்டு ரசிப்பதுடன் கிக்யூ புல்வெளிகளிலும் அமர்ந்து குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ச்சியுடன் திரும்பி செல்கின்றனர்.

அதேபோல உதகை படகு இல்லத்தில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் மிதிபடகு, துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகுகளில் சவாரி செய்து உற்சாகத்துடன் செல்கின்றனர்.



இதே போல ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா காட்சி முனைக்கு வந்த வண்ணமாக இருப்பதால் காலை முதலே தொட்டபெட்டா சாலையில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.



இதன் காரணமாக சுற்றுலா தலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் காவல்துறை கண்காணிப்பு பணியை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...