மேட்டுப்பாளையம் பெள்ளாதி மாரியம்மன் கோயில் நில ஏல அறிவிப்பு ரத்து - நடந்தது என்ன?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 17 ஏக்கர் நிலத்தை ஏலம் விடுவது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தொட்டிபாளையம் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெள்ளாதி மாரியம்மன் கோவில் உள்ளது.

சுமார் 30 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு சொந்தமாக உள்ள இந்த கோவில், காரமடை அரங்கநாதர் கோவிலின் உப கோவிலாக உள்ளது. இந்த ஆலயத்திற்கு சொந்தமாக சுமார் 17 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

கோவிலுக்கு சொந்தமாக உள்ள இந்த விவசாய நிலத்தை, கோயில் பூசாரிகள் பராமரித்து வரும் நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று இந்த 17ஏக்கர் பூமியை ஏலம் விட முடிவு செய்து அதற்கான பணிகளை கோயில் வளாகத்தில் நடத்த முற்பட்டனர்.



காரமடை அரங்கநாதர் கோவில் ஆய்வாளர் ஹேமலதா முன்னிலையில் இந்த ஏலத்தை நடத்த முயன்றபோது, கோவில் பூசாரிகளுக்கு ஆதரவாகவும் மற்றும் எதிராகவும் என நிர்வாகத்தினர் இரு தரப்பாக பிரிந்து முறையான அறிவிப்பு வழங்காமல் ஏலத்தை நடத்த அதிகாரிகள் முயற்சிப்பதாகக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரிடையே மோதல் உருவான நிலையில், காவல்துறையினர் வந்து சமரசம் செய்தனர். இருப்பினும், தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டதால் இன்று நடைபெற இருந்த ஏலம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் அங்கிருந்தவர்கள் கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விரைவில் முறையான அறிவிப்பு வெளியிட்டு, ஏலத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...