திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி சிவசேனா கட்சியினர் ஜனாதிபதிக்குக் கடிதம்

இந்து மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வரும் திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு சிவசேனா கட்சியினர் தபால் அனுப்பி வைப்பு.


திருப்பூர்: திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி சிவசேனா கட்சியினர் ஜனாதிபதி உள்ளிட்டோருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தபால் நிலையத்திலிருந்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருமுருக தினேஷ் தலைமையில் சிவசேனா கட்சியினர் ஜனாதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோருக்குத் தபால் ஒன்றை அனுப்பினர்.



அந்த தபாலில், இந்து மக்கள் புனிதமாகக் கருதும் ராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திர திட்டத்தை அமைக்க திமுக அரசு முயன்று வருவதாகவும் அத்தகைய இந்து விரோத சேது சமுத்திர திட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும், தமிழக சட்டசபையில், ராமர் பாலத்தை ஆடம்ஸ் பாலம் என முதலமைச்சர் தெரிவித்ததாகவும்,



அந்த வார்த்தை இந்து மக்களைக் காயப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் ஆடம்ஸ் பாலம் என்ற வார்த்தையை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் மற்றும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் இலங்கையிலிருந்து பல்வேறு நாட்டினர் இந்தியாவில் ஊடுருவ வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும்.

ஏழை,எளிய மக்களுக்குப் பயனின்றி பெருமுதலாளிகளுக்கு மட்டுமே இத்திட்டம் லாபம் அளிக்கும் என்பதாலும், சேது சமுத்திர திட்டத்தைக் கைவிட வேண்டும் மற்றும் இந்து விரோத போக்கை கடைப்பிடித்துச் செயல்பட்டு வரும் திமுக அரசை ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...