உடுமலை வழியாக 20 வருடங்களுக்கு முன்பு இயங்கிய ரயிலை இயக்க கோரிக்கை!

உடுமலை வழியாக 20 வருடங்களுக்கு முன்பு மீட்டர்கேஜ் பாதையின் போது இயங்கிய ரயில்கள் இயக்கும்படி தென்னக ரயில்வே-க்கு பொதுமக்கள் கோரிக்கை.


திருப்பூர்: கோவை-திண்டுக்கல் இடையே 20 வருடங்களுக்கு முன் மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்த காலத்தில் இயங்கிய ரயிலை மீண்டும் இயக்கினால் சுமார் 70 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக 20 வருடங்களுக்கு முன் மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்த காலத்தில் கோவை-திண்டுக்கல் இடையே வெற்றிகரமாக ஓடிய பயணிகள் ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த ரயில் இயக்கப்படுவதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கும் விவசாயிகள், மாணவர்கள், தினசரி பயணிக்கும் பயணிகள், வணிகர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் இந்த ரயில் இடைப்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து சென்னை, பெங்களூர், ஐதராபாத், கொச்சி மற்றும் பல நகரங்களுக்குக் கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் வழியாக இரு மார்க்கங்களிலும் செல்வதற்கு வழி வகுக்கும்.

இந்த வழித்தடத்தில் உள்ள பதினான்கு ரயில் நிலையங்களை பயன்படுத்துவதன் மூலம் சுமார் 70 லட்சம் பேர் பயனடைவர். இதன் மூலம் ரயில்வே துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், பயணிகள் பாதுகாப்பாக ரயில்களில் பயணிக்க முடியும்.

இந்த வழித்தடத்தில் கோயம்புத்தூர், போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் உள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேலுச்சாமி, சண்முகசுந்தரம், பி.ஆர்.நடராஜன் மற்றும் எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், தாமோதரன், பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், மகேந்திரன், ஐ.பி. செந்தில்குமார். திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அமைச்சர் சக்கர பாணி ஆகியோர் ரயில் சேவையை உடனடியாக தொடங்குமாறு மத்திய அமைச்சர் ஸ்ரீஅஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இந்த ரயில் சேவையை விரைவில் மீண்டும் துவங்கி தென்னக ரயில்வேயின் மதுரை, பாலக்காடு, சேலம் ஆகிய 3 கோட்டங்களும் பொதுமக்களின் நலனுக்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...