பசுமைதேசம் சார்பில் இயற்கையை ஊக்குவிக்கும் மாடித் தோட்ட பயிற்சி


காய்கறிகளுக்காக நமது முன்னோர்கள் பெரிய அளவில் செலவு செய்தது இல்லை. ஆனால், இன்று கணிசமான தொகையில் குறைந்த அளவு காயகறிகளை வாங்கும் நிலைதான் உள்ளது.

காரணம், காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போவதுதான். அப்படி வாங்கும் காய்கறிகள் ரசாயன உரம் தெளித்து விளைய வைக்கப்பட்டதாகவும் இருப்பதால் அவை சத்துக்குறைபாடுள்ள, மேலும் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது.



இதனைக் கருத்தில் கொண்டு ஆறாம் திணை ஆர்கானிக் சந்தை நந்தகோபால், சுவாசம்- செல்வகுமார், இயற்கை அன்னை- நவீன் ஆகியோர் இணைந்து பசுமை தேசம் சார்பில் பெரியநாயக்கன்பாளயத்தில் பாரம்பரிய காய்கறித் தோட்டம் மற்றும் மாடித் தோட்டம் அமைப்பதற்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.



இந்நிகழ்வில் தோட்டம் அமைப்பதற்கான சூழலை அறிதல், விதைகளை தேர்வு செய்யவது மற்றும் பாதுகாப்பதற்கான வழிமுறைகள், தொழு மண், மண் புழு உரம், வீட்டுக் கழிவுகள் கொண்டு இயற்கை உரம் தயாரிப்பு, நீர் மற்றும் ஆற்றல்களின் சிக்கன பயன்பாடு, பூச்சிகளை அறிதல் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள் தயாரிப்பு, தோட்ட பராமரிப்பு மற்றும் பாரம்பரிய நாட்டு மாடு வளர்ப்பு, அதில் வரும் பால் இல்லாமல் மற்ற மாட்டின் சானம், கோமியம் மதிப்பு கூட்டி விற்பது பற்றிய பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இதில், மாடு வளர்ப்பு பற்றிய பயிற்சிக்கு தூத்துக்குடியில் இருந்து 6 விவசாயிகள் உட்பட மொத்தம் 67 நபர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். நிறைவாக, பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தேக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...