கோவை அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவினர் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்


அ.தி.மு.க  பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே தற்போது அதிகாரப்போட்டி நிலவி வருகிறது.

அ.தி.மு.க -வில் ஒரு பிரிவினர் சசிகலாவிற்கும், மற்றொரு பிரிவினர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அ.தி.மு.க  வழக்கறிஞர்கள் பிரிவினர் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக கோவை மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அடிமட்ட தொண்டனாக இருந்து படிப்படியாக உயர்ந்தவர் எனவும், ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து முதலமைச்சராக பணியாற்ற உறுதுணையாக இருப்போம் எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மேலும், அ.தி.மு.க  சட்டமன்ற உறுப்பினர்கள் நெருக்கடியான சூழலில் விடுதிகளில் அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்களும் விரைவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிப்பார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...