சகோதரியிடம் கொடுத்த கடனை வசூலிக்க 80கி.மீ மூதாட்டி பயணம்

பல்லடம் அருகே 80 வயது மூதாட்டி சகோதரியிடம் கொடுத்த பணத்தை வசூலிக்க 80 கிலோமீட்டர் தனி ஆளாகப் பயணம்.


திருப்பூர்: தள்ளாத வயதில் சகோதரியிடம் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்க வந்த மூதாட்டிக்கு உணவளித்து உபசரித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது ஆறுமுத்தாம் பாளையம். இப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு எதிரே 80 வயது மூதாட்டி ஒருவர் தட்டுத்தடுமாறி வந்து கோயில் அருகே அமர்வதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் விசாரித்துள்ளனர்.

அப்போது அந்த மூதாட்டி சொன்ன பதில் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. மூதாட்டி பெயர் பொன்னம்மாள் எனவும், 80 வயதைக் கடந்த அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள கோயிலில் தூய்மை பணி செய்துகொண்டு அக்கம்பக்கத்தினர் கொடுக்கும் உணவு மற்றும் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்.

இரவு நேரங்களில் கோயில் அருகே உள்ள பூட்டப்பட்ட கடைகளின் முன்பு உறங்கிவிட்டு அதிகாலை எழுந்து கோயில் பணிகளைச் செய்து வருகிறார். கணவர் பழனிச்சாமி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிடவே தனது ஒரே மகன் மனவளர்ச்சிகுன்றிய நிலையில் சித்தூரில் இருப்பதாகக் கூறினார்.

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுத்தாம் பாளையத்தில் வசித்துவரும் தனது சகோதரிக்குத் தான் சிறுக, சிறுக சேர்த்து வைத்திருந்த சேமிப்பு பணத்திலிருந்து 25 ஆயிரத்தைக் கொடுத்ததாகத் தெரிவித்தார். மேலும் கொடுத்த பணத்தைச் சகோதரியிடம் திருப்பி கேட்டபோதெல்லாம் தவணை சொல்லியே காலம் கடத்திவந்ததாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையத்திலிருந்து தனியாக மூதாட்டி பொன்னம்மாள் பேருந்து ஏறி திருப்பூர் வந்து திருப்பூரிலிருந்து டவுண் பேருந்தில் சின்னக்கரைக்கு வந்த பின்பு, அங்கிருந்து ஆட்டோவில் ஆறுமுத்தாம் பாளையம் வந்துள்ளார்.

பின்னர் தனது சகோதரி வீட்டிற்குச் சென்று கொடுத்த முழு பணத்தைக் கேட்டுள்ளார். பணத்தைத் தர மேலும் கால அவகாசம் கேட்டுள்ளார் அவரது சகோதரி. இதனால் வீட்டிலிருந்து கோபித்துக்கொண்டு கோயில் அருகே தட்டுத்தடுமாறி வந்து மூதாட்டி பொன்னம்மாள் அமர்ந்துள்ளார்.



பின்னர் அங்கு வந்த அவரது சகோதரி அவரது கையிலிருந்த 2 ஆயிரம் பணத்தைக் கொடுத்துச் சாப்பிடச் சாப்பாட்டையும் தட்டில் வைத்துச் சாப்பிட வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

80 வயது மூதாட்டி தனது தள்ளாத வயதில் தனது சகோதரியிடம் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டு 80 கிலோமீட்டர் தளராது வந்து வசூலிக்கச் சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...