ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? - நடிகர் கமல்ஹாசன் பேட்டி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தருவது குறித்து செயற்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.

பின்னர் செய்தியாளர்களை கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உங்களிடம் ஆதரவு கோரியுள்ளார். இதில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.



அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், இது தொடர்பான நிலைப்பாடை எடுப்பதற்காகத்தான் இப்போது கட்சி நிர்வாகிகள் இங்கு கூடியிருக்கிறோம். எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் அவர்களுடன் கலந்தாலோசித்து எங்களுடைய நிலை என்ன என்பதை கண்டிப்பாக உங்களுக்குத் தெரிவிக்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். இது தொடர்பாக நாங்கள் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிலவரம் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, ‘கமல்ஹாசன் வரவேற்ற விதமும், கை கொடுத்த விதமும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது’ என ஈ.வி.கே.எஸ் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நம்பிக்கை எல்லோருக்குமே இருக்க வேண்டும். நான், இந்தக் கதவுக்குள் வருகின்ற அனைவருக்குமே எங்களைப் பொறுத்தவரை நல்ல வரவேற்பு இருக்கும்.

இந்த விஷயத்தில் நான் மட்டும் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது. எனவே, நாங்கள் கலந்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். லாபத்தைப் பற்றி நினைக்காமல் மக்களுக்கு எது நல்லது பயக்கும் என்பது குறித்து பேசி முடிவெடுப்போம். மேலும் நீங்கள் என்ன முடிவு என்று கேட்கிறீர்கள். அதை நான் அப்புறம் சொல்கிறேன் என்று கமல்ஹாசன் பதிலளித்தார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிட தயங்குவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், இல்லையே நான் இன்னும் என்னுடைய முடிவை சொல்லவே இல்லையே. அதற்கு முன்னாடி ஊடகவியலாளர்கள் கூட்டணியை முடிவு செய்கின்றனர். தயக்கத்தை உறுதி செய்கின்றனர். ஊடகங்களுக்கு செய்தி தேவை. எனக்கு தமிழகத்துக்கு முன்னேற்றம் தேவை என்று அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...